விருத்தாசலம் சிறையில் கைதி செல்வமுருகன் உயிரிழந்த சம்பவம் : வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு வேல்முருகன் பரபரப்பு புகார்.


கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி கடலூர் மாவட்டம் நெய்வேலி நகர போலீசார் திருட்டு வழக்கு ஒன்றில் செல்வமுருகன் என்பவரை கைது செய்தனர். அவர் விருத்தாச்சலம் சிறையில் அடைக்கப்பட்டார். 

நவம்பர் 4 ஆம் தேதி உடல்நலம் சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

இதைதொடர்ந்து போலீஸ் சித்திரவதை செய்ததால்தான் தன் கணவர் உயிரிழந்தார் என செல்வமுருகனின் மனைவி நவம்பர் 5 ஆம் தேதி புகார் அளித்தார். 

மேலும் பல அரசியல் கட்சி தலைவர்களும் செல்வமுருகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். 

Also Read  சென்னையில் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை தந்த பயிற்சியாளர் - அதிர வைக்கும் தகவல்கள்

இதையடுத்து நவம்பர் 7 ஆம் தேதி விசாரணை சிபிசிஐடி க்கு மாற்ற்றப்பட்டது. ஆனால் விசாரணை நேர்மையான முறையில் நடக்கவேண்டும் குற்றம் சாட்டபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறி செல்வமுருகனின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்தனர். 

அதனால் அவரது உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவ கல்லூரியில் வைக்கப்பட்டு உள்ளது. 

Also Read  ஈரோட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை: ரூ 4 கோடி பறிமுதல்

சிபிசிஐடி டிஎஸ்பி குணவராமன் தலைமையில் ஆன குழு பல தரப்பில் விசாரணை நடத்தி வருகிறது. 

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், நகைக்கடை ஒன்றில் முருகனை போலீசார் மிரட்டும் சிசிடிவி காட்சி உள்ளிட்ட சில ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

Also Read  கோயில் வளாகத்தில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து கொலை செய்த ஜோதிடர்: திடுக்கிடும் தகவல்கள்

திட்டமிட்டே போலீசார் செல்வமுருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பெட்ரோல், டீசல் விலை உயர்வு – 142 இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

sathya suganthi

“லஞ்ச ஒழிப்பு என்ற பெயரில் கோரதாண்டவம் ஆடும் திமுக!” – இபிஎஸ், ஓபிஎஸ் கண்டனம்..!

Lekha Shree

ஊடரங்கை விதிமுறைகளை கடுமையாக்கும் தமிழக அரசு…! புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

Devaraj

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்

Tamil Mint

பாலியல் வன்கொடுமை வழக்கு – குற்றவாளிகளுக்கு மரணம் அடையும் வரை ஆயுள் தண்டனை…!

Lekha Shree

“அதிமுக-பாஜக, அமமுக தலைமையை ஏற்றால் கூட்டணி அமைக்க தயார்” – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

Lekha Shree

கும்பகோணத்தில் ஒரே பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா…!

Devaraj

மத்திய அரசின் முடிவை ஏற்க முடியாது: தமிழக அரசு திட்டவட்டம்

Tamil Mint

“பாடப்புத்தகங்களில் இனி ‘ஒன்றிய அரசு’ தான்!” – திண்டுக்கல் ஐ.லியோனி

Lekha Shree

அமலானது அதிகாரபூர்மற்ற லாக்டவுன்: தவிக்கும் தமிழகம்

Tamil Mint

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்: தமிழிசை செளந்தரராஜன்

Tamil Mint

பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கோரிக்கை

Tamil Mint