விவசாயிகள் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம் வைகோ அறிக்கை


பாரத் பெட்ரோலியம் நிறுவனம், கோவை இருகூரில் இருந்து பெங்களூர் தேவனகொந்தி வரை எண்ணெய்க்குழாய் பதிக்கும் திட்டத்தைச் (IDPL) செயல்படுத்தி வருகின்றது. இதனால், திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ,சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஆறு மாவட்டங்களில் வேளாண் விளை நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்;          பல்லாயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படும்.

 

எனவே, இது குறித்து விவசாயிகள் தமிழக முதல்வரிடம் நேரில் முறையிட்டனர்.

 

Also Read  ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் அமித்ஷா.

தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி, தொழில்துறை அமைச்சரைச் சந்தித்து, விவசாயிகள் விரிவாகப் பேசினர். ‘இது மத்திய அரசு திட்டம்; நாங்கள் எதுவும் செய்ய இயலாது’ என  தொழில்துறை அமைச்சர், 2020 பிப்ரவரி மாதம் தெரிவித்தார்.

 

அதன்பிறகு, பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் பொறுப்பாளர்கள் தில்லிக்கு வந்தனர். அவர்களை, பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் நான் அழைத்துச் சென்றேன். அவரிடம் முறையிட்டனர். அதன்பிறகு, பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினார்கள். அனைத்து இந்திய விவசாய சங்கங்கள் ஆதரவு அளித்தனர். 

Also Read  பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப்பணியாளர்கள் - மு.க.ஸ்டாலின்

 

இந்நிலையில் தற்போது, தருமபுரி மாவட்டத்தில் நல்லாம்பள்ளி,பாலக்கோடு ஆகிய இரு தாலூக்காக்களில், இந்தத் திட்டத்திற்கான நிலங்களை, நடுவண் அரசே கையகப்படுத்தி, பாரத்பெட்ரோலிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசு இதழில் ஆணை பிறப்பித்து உள்ளது. விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்திய அரசு நிலம் கையகப்படுத்தி இருப்பது, கடும் கண்டனத்திற்குரியதாகும். இந்த நடவடிக்கையால் விவசாயிகள்  அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

கொங்கு மண்டல விவசாயிகளுக்கு எதிரான, பாஜக மோடி அரசின் நடவடிக்கைக்கு, தமிழகத்தில் ஆளும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசு  முழு ஒத்துழைப்புக் கொடுத்து வருகின்றது.

Also Read  மு.க.ஸ்டாலின் உடல் நலம் என்ன ஆனது ?

 

விளைநிலங்களில் எண்ணெய்க் குழாய் பதிப்பதைக் கைவிட்டு, வீண் பிடிவாதம் செய்யாமல், மாற்று வழிகளில் திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்ற கருத்தை, இரண்டு அரசுகளும் ஆய்வு செய்ய வேண்டும்; விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

 

வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க.,

‘தாயகம்’

சென்னை – 8

05.11.2020


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி: முதலமைச்சர் அறிவிப்பு!

Bhuvaneshwari Velmurugan

எதிர்கட்சியினர் பேசத் தயங்கும் வார்த்தைகளை பேசி தவறு செய்பவர்கள் வருந்துவார்கள் – டிடிவி.தினகரன்

Tamil Mint

தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் திறப்பு

Tamil Mint

தமிழ்நாடு வளர்ச்சி கொள்கைக் குழுவில் ஜெயரஞ்சன் – மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு

sathya suganthi

ஆட்சியரின் ஆய்வுக் கூட்டத்தில் இந்தி திணிப்பா? புதுக்கோட்டையில் பரபரப்பு

Tamil Mint

வன்னியருக்கான 10.5% உள் ஒதுக்கீடு – தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

sathya suganthi

நெல்லை, தூத்துக்குடியில் ராகுல் காந்தி இன்று பரப்புரை!

Lekha Shree

தினகரன் மகளுக்கு திருமண ஏற்பாடு

Tamil Mint

8 வழிச்சாலை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் – உச்சநீதிமன்றம்.

Tamil Mint

அதிமுக வைத்தியலிங்கம் குடும்பத்துடன் பிரச்சனை; தஞ்சாவூரில் போலீஸ் மிரட்டியதால் இளைஞர் தற்கொலை!

Tamil Mint

வானதி சீனிவாசனுக்கு சிக்கல்.. கோவை தெற்கில் மறு வாக்கு எண்ணிக்கை..?

Ramya Tamil

கோவையில் மற்றுமொரு காவல் உதவி ஆய்வாளரின் அடாவடி…!

Devaraj