ஸ்ட்ரைக்குக்கு இல்லை விடுப்பு: தமிழக அரசு கண்டிப்பு


மத்திய அரசு ஊழியா் சங்கங்கள் உள்ளிட்ட இதர சங்கங்கள் அறிவித்துள்ள பொது வேலை நிறுத்த அறிவிப்பு காரணமாக, தமிழக அரசு ஊழியா்களுக்கு வரும் 26-இல் விடுப்பு ஏதும் அளிக்கப்பட மாட்டாது என தலைமைச் செயலாளா் க.சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

அனைத்துத் துறை செயலாளா்கள், துறைத் தலைவா்கள், மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பிய உத்தரவு விவரம்:

Also Read  "தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்" - நடிகர் ரஜினிகாந்த்

மத்திய ஊழியா் சங்கங்கள் மற்றும் பணியாளா் சங்கங்களைச் சேர்ந்தவா்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வரும் 26-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனா். இப் போராட்டத்தில் பங்கேற்பதோ அல்லது பங்கேற்பதாக அச்சுறுத்துவதோ தமிழ்நாடு அரசு ஊழியா்கள் நடத்தை விதிகளின் பிரிவுகளுக்கு எதிரானதாகும்.

இந்த விதிகளை மீறுவோா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள வரும் 26-ஆம் தேதி, அரசு ஊழியா் எவரேனும் அலுவலகத்துக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் அவா்களுக்கு அன்றைய தினம் ஊதியம் அளிக்கப்படாது. மேலும், அன்றைய தினத்தில் மருத்துவ விடுப்பைத் தவிா்த்து, பிற விடுப்புகள் எதற்கும் அனுமதியில்லை.

Also Read  தமிழகத்தில் இதுவரை 2,700 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு - வல்லூர் குழு

வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள தினத்தன்று, ஊழியா்களின் வருகைப் பதிவேடு தொடா்பான விவரங்கள் அடங்கிய அறிக்கையை துறைத் தலைவா்கள் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தலைமைச் செயலகத்தைச் சோந்த ஊழியா்களது பதிவேட்டை தனியாக அனுப்பிட வேண்டும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கதிகலங்க வைக்கும் வீடியோ – மருத்துவமனையில் இடமின்றி உயிரிழந்த 16 மாத குழந்தை…!

Devaraj

தி நகரில் அலைமோதும் மக்கள், பீதியில் அதிகாரிகள்

Tamil Mint

தமிழகம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்

Tamil Mint

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டி- கமல்ஹாசன் அறிவிப்பு..!

Lekha Shree

சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் ஸ்டாலின் இன்று சந்திப்பு…!

sathya suganthi

முன்னாள் எம்.பி., பா.செங்குட்டுவன் உடல்நலக் குறைவால் காலமானார்…!

Lekha Shree

தமிழறிஞர் தொ.பரமசிவன் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய கோரிக்கை

Tamil Mint

எச்.ராஜாவுக்கு எதிராக கருத்து சொன்ன 3 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து நீக்கம்…!

sathya suganthi

குழந்தையை மடியில் வைத்து கார் ஓட்டிய டிரைவர்… கவனக்குறைவால் ஏற்பட்ட உயிரிழப்புகள்!

Lekha Shree

தமிழகம்: மயிலாடுதுறை தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உருவாகவுள்ளது

Tamil Mint

தமிழகம்: 11,712 பேர் கொரோனாவிற்கு பலி

Tamil Mint

இந்தியர்களை எப்படி மீட்பது.? : பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை.!

mani maran