a

குப்பையோடு போக இருந்த ரூ.7.5 கோடி லாட்டரி பணம் – கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த இந்தியர்!


அமெரிக்காவின் மசாசூசெட்சில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிஷா குடும்பத்தினர் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர்.

அந்த கடையின் வாடிக்கையாளர்களில் ஒருவரான லீ ரோஸ் பீகா, ஒரு லாட்டரிச்சீட்டை வாங்கி அவசர அவசரமாக ரகசிய எண்ணை சுரண்டிப்பார்த்துள்ளார்.

அதில் பரிசு விழவில்லை என எண்ணி, அந்தச்சீட்டை கடைக்காரரிடம் தந்து விட்டு சென்றுவிட்டார். அதை வாங்கிய கடைக்காரரும் ஒரு மூலையில் போட்டார்.

ஆனால் ஒரு மாலைப்பொழுதில் குவியாகக்கிடந்த பழைய லாட்டரிச்சீட்டுகளை அகற்றிய போது, ரகசிய எண்ணை சரியாக சுரண்டப்படாத ஒரு சீட்டை கடைக்காரர் கண்டெடுத்துள்ளார்.

Also Read  20 நாடுகளுக்கு தடை விதித்த சவூதி அரேபியா !!! எதற்காக தெரியுமா ?

அரைகுறையாக சுரண்டி பார்க்கப்பட்ட ரகசிய எண்ணை முழுமையாக பார்த்தபோது, அதற்கு 1 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.7.5 கோடி பரிசு விழுந்திருந்தது தெரியவந்தது.

இதையறிந்த அபிஷா குடும்பத்தினர், லீ ரோஸ் பீகாவை நேரில் வரவழைத்து அவரது பரிசுச்சீட்டை ஒப்படைத்தனர். அபிஷா குடும்பத்தினரின் நேர்மையை கண்டு வியந்துபோன லீ ரோஸ் பீகா, அவர்களைக் கட்டித்தழுவி பாராட்டினார்.

Also Read  சூரிய ஒளியை ஈர்த்து 18 ஆண்டுகள் சேமித்து வைக்கும் திரவம் கண்டுபிடிப்பு!

இதுபற்றிய செய்தி உள்ளூர் ஊடகங்களில் வெளியான நிலையில், அபிஷா குடும்பத்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

அந்தப் பரிசு சீட்டை தாங்களே வைத்திருந்தால்கூட இந்த அளவுக்கு பிரபலமாகி இருக்க மாட்டேன் என்றும் உரியவரிடம் ஒப்படைத்ததால் மிகவும் பிரபலமாகி விட்டேன் என்றும் அபிஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Also Read  விரைவில் அறிமுகமாகும் Corona Nasal Vaccine! எங்கு தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாலிவுட் பாடல்களை பாடி அமெரிக்க தேர்தலில் ஓட்டு சேகரித்த இந்திய வம்சாவழி தொழில் அதிபர்

Tamil Mint

கொரோனா தடுப்பூசி: உலகளவில் இந்தியா படைத்த சாதனை என்ன தெரியுமா?

sathya suganthi

காதலர் தினத்துக்காக மனைவி கொடுத்த வித்தியாசமான பரிசைப் பார்த்து கணவர் அதிர்ச்சி! – அப்படி என்னவா இருக்கும்?

Tamil Mint

ராணுவ ஆட்சியால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு தற்காலிகமாக அடைக்கலம் கொடுக்க அமெரிக்கா தாயார்..

VIGNESH PERUMAL

கண் தெரியாத நரிக்கு வழிகாட்டியாக மாறிய கால்களை இழந்த நாய்! – வீடியோ

Shanmugapriya

ஊரடங்கில் ஆபாச படங்கள் பார்த்த இளைஞர்கள் – வெளியான திடுக்கிடும் டேட்டா..!

Lekha Shree

ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளிப் பெண்

Tamil Mint

இன்று உலக பிரா அணியாத தினம்,

Tamil Mint

கொரோனா எதிரொலி…! இங்கிலாந்து அரண்மனையில் இந்த ஆண்டும் ரத்தான கொண்டாட்டம்…!

Devaraj

சூயஸ் கால்வாயில் ‘எவர் கிவன்’ கப்பல் சிக்கியதற்கு ‘மம்மிகளின் சாபம்’ தான் காரணம்?

Lekha Shree

சீன தொழிலதிபருடன் நெருங்கிய தொடர்பு – இதுதான் பில்கேட்ஸ் விவகாரத்துக்கு காரணமா…!

sathya suganthi

நண்பருக்காக மொட்டை அடித்துக் கொண்ட இளைஞர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ

Shanmugapriya