“+1 மாணவி கற்பழிப்பு வழக்கு”.. சாகும்வரை ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பு…


பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய  வழக்கில் கூலித்தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்து உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரவாதி அருகே மறவாமதுரை கங்காணிப்பட்டியை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் . கூலித்தொழிலாளியான இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இந்த நிலையில் ராஜ்குமார், பிளஸ்-1 மாணவி ஒருவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொண்டு பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அந்த சிறுமியை கொலை மிரட்டல் செய்து தொடர்ந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

Also Read  பாலியல் தொல்லை வழக்கு: நர்சிங் கல்லூரி தாளாளர் நீதிமன்றத்தில் சரண்..!

இந்த நிலையில் சிறுமி கர்ப்பம் ஆனவுடன், அதை கலைக்க மருத்துவமனைக்கும் அழைத்து சென்றார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில்  கடந்த ஆண்டு மார்ச் மாதம்  அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா இன்று  தீர்ப்பு வழங்கினார்.

இதில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதற்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், அபராதம் ரூ.50 ஆயிரமும், அபராத தொகை கட்டத்தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதம் ரூ.20 ஆயிரமும், அபராத தொகை கட்டத்தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து இதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். மேலும் அரசு தரப்பில் சிறுமிக்கு ரூ.1½ லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தார். 

Also Read  ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வாகன விபத்தில் உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆரணி: 10 வயது சிறுமி உயிரிழப்பு… ஓட்டல் உரிமையாளர், சமையல்காரர் கைது..!

Lekha Shree

இன்றைய தலைப்புச் செய்திகள்..!

Lekha Shree

மனைவியின் சேலையை எரித்ததால் ஆத்திரம்!!! மைத்துனரை ஷாக் வைத்து கொன்ற மாமன்…..

Lekha Shree

மகனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தந்தை அடித்த சம்பவம்!!! குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு…

Lekha Shree

மீண்டும் கைதான வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு ஜாமின்…!

Lekha Shree

“நான் ரொம்ப பிஸி..!” – கணவர் ராஜ் குந்த்ரா வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி வாக்குமூலம்..!

Lekha Shree

சூர்யாவை தாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த மயிலாடுதுறை பாமக செயலாளர் மீது வழக்குப்பதிவு..!

Lekha Shree

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை – முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு ஜாமின்!

Lekha Shree

இளம்பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை காட்டி மிரட்டிய குடும்ப நண்பர் கைது..!

Lekha Shree

ஹேலோ நாங்க சைபர் கிரைம் போலீசார் பேசுறோம் “ஆபாச வீடியோ பாத்தியா”: மாணவனை மிரட்டி பணம் பறித்த நபர்கள் கைது.

mani maran

பம்பு செட்டில் பதுக்கிவைத்திருந்த 800 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்

VIGNESH PERUMAL

இன்ஸ்டாகிராம் நட்பு – கடத்தலில் முடிந்த பகீர் சம்பவம்! நடந்தது என்ன?

Lekha Shree