தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!


தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் வரும் 7ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Also Read  மயிலாப்பூர்: 3 வது மாடி பால்கனி பெயர்ந்து விழுந்ததால், அச்சத்தில் மக்கள்!

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு தென் கிழக்கு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Also Read  முதல்வரின் கான்வாய் வாகனங்கள் குறைப்பு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தூத்துக்குடியில் ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை..!

suma lekha

‘முத்த ஓவியம்!’ – 3000 முத்தங்களால் வரையப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலினின் உருவம்..!

Lekha Shree

விஜய் விஷ வளையத்தில் சிக்கியுள்ளார், என்னை ஜெயிலுக்கு அனுப்பினாலும் பரவாயில்லை: எஸ் ஏ சி

Tamil Mint

பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப்பணியாளர்கள் – மு.க.ஸ்டாலின்

sathya suganthi

13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சென்னையில் தொலைக்காட்சி பத்திரிகையாளர் கைது

Tamil Mint

சனிக்கிழமையும் ஆபீஸ்க்கு வாங்க: அதிகாரிகளுக்கு அரசு அதிரடி உத்தரவு

Tamil Mint

லஞ்சப் புகாரில் மத்திய பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் கைது: ஒப்பந்ததாரர்களும் கையும் களவுமாக சிக்கினர்

sathya suganthi

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கில் தளர்வு? நிபுணர்கள் சொன்ன தகவல்…!

sathya suganthi

தேவா பதவியில் வாகை சந்திரசேகர்: முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு.!

mani maran

“வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புங்கள்” – தமிழக உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு கடிதம்

Shanmugapriya

ஜோதிடத்தை நம்பி 5 வயது மகனை‌ மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த தந்தை…..

Jaya Thilagan

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு ஜாமின்! – ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு!

Lekha Shree