a

10 வருஷமா எங்க சி.எஸ்.கேல பெரிசா எதையும் மாத்தல – மனம் திறந்த எம்.எஸ்.தோனி!


ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு முறையில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை குஷியாக்குவதில் எப்போதுமே கில்லியாக வலம் வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை 3 முறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது.

கடந்த ஆண்டை தவிர்த்து ஒவ்வொரு முறையும் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து எதிரணியை கடுமையாக சோதித்திருக்கிறது. இந்த நிலையில் சன் ரைசர்ஸ் ஐதரபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

Also Read  உதவிக்கு முன் வந்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

போட்டிக்கு பின்னர் பேசிய தோனி, கடந்த ஆண்டு சென்னை அணியின் தடுமாற்றத்திற்கு பிளேயிங் லெவன் தான் காரணம் என கூறினார். எந்தவொரு தொடரின் தொடக்கத்திலும் ப்ளேயிங் 11ல் பிரச்னைகள் இருக்கும் என்றும் எவ்வளவு விரைவாக அதனை சரிசெய்கிறோமோ அவ்வளவு நல்லது என பேசினார்.

கடந்தாண்டு 5- 6 மாதங்களாக வீரர்கள் யாரும் கிரிக்கெட் விளையாடாததால் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டதாகவும் தோனி தெரிவித்தார்.

Also Read  ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு; சிஎஸ்கே ரசிகர்களுக்கு செம ஷாக் நியூஸ் இருக்கு!

நடப்பு தொடரில் சென்னை அணி வீரர்கள் அனைவருமே கூடுதல் பொறுப்போடு விளையாடுவதாக கூறிய தோனி, கடந்த 8-10 ஆண்டுகளாக எங்கள் அணியில் நாங்கள் பெரிதாக எந்த வீரர்களையும் மாற்றவில்லை என தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மேக்ஸ்வெல் – டி வில்லியர்ஸ் அதிரடியால் பெங்களூரு அணி வெற்றி!

Devaraj

ஐபிஎல் போட்டிக்கும் ஆப்பு வைத்த கொரோனா! ட்ரெண்டாகும் Cancel IPL ஹேஷ்டேக்!

Lekha Shree

கொரோனா பரவலில் ஐபிஎல் முக்கியமா – கில்கிறிஸ்ட் கேள்வி!

Devaraj

என்னை யாரும் குறை சொல்லக்கூடாது – எம்.எஸ். தோனி ஓபன் டாக்!

Jaya Thilagan

ஐதராபாத்துக்கு ஹாட்ரிக் தோல்வி – புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ்

Devaraj

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை சமாளிக்குமா சன்ரைசர்ஸ் ஹைதராபாத்?

Lekha Shree

ஐபிஎல் 2021: மும்பை அணிதான் சாம்பியன் – சொல்வது யார் தெரியுமா?

Lekha Shree

ஐதராபாத்க்கு வந்த சோதனை – சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற டெல்லி அணி!

Jaya Thilagan

தோனிக்கு 12 லட்சம் அபராதம் – சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு அடுத்த சோதனை!

Jaya Thilagan

ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு; சிஎஸ்கே ரசிகர்களுக்கு செம ஷாக் நியூஸ் இருக்கு!

Bhuvaneshwari Velmurugan

சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் போட்டியில் நிகழ்ந்த முக்கிய துளிகள்!

Jaya Thilagan

வெற்றி நடை போடும் சி.எஸ்.கே. – 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Jaya Thilagan