இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் – சென்னையில் பாதுகாப்பு பணியில் 10,000 போலீசார்!


சென்னையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஒமைக்ரான் வகை கொரோனா மீண்டும் உலக நாடுகளுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்ற புதிய வகை தொற்று மிக வேகமாக 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

Also Read  டிடிவி தினகரன் மகள் திருமணம் - திருமண ஜோடிகளை வாழ்த்திய சசிகலா…! வைரல் புகைப்படம் இதோ..!

இந்தியாவில் கடந்த டிசம்பர் 2ம் தேதி ஒமைக்ரான் பாதிப்பு முதன்முதலாக கண்டறியப்பட்டது. ஆனால், அசுர வேகத்தில் பரவ தொடங்கியிருக்கும் ஒமைக்ரான் தொற்றால் இதுவரை இந்தியாவில் 20,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினசரி கொரோணா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் ஒமைக்ரான் வகை தொற்று பரவாமல் தடுக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனையில் முடிவில் தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதாலும் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Also Read  பாலியல் புகார் - தனியார் நர்சிங் கல்லூரிக்கு சீல்..!
Chennai district - Wikipedia

சென்னையில் இன்று இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. இதற்காக, 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சென்னையில் 499 இடங்களில் தடுப்புகள் அமைத்து தேவையின்றி வெளியே வருபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னையில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வணிக நிறுவனங்கள் வியாபாரம் செய்வோர் ஆகியோர் அனைவரும் 10 மணிக்கு முன்பாகவே தங்களது வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை அடைத்து விடவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணி, மருத்துவ உதவிகோரி செல்பவர்கள் அதற்கான ஆவணங்களை காண்பித்தால் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Also Read  கலக்கும் வில்லேஜ் குக்கிங் சேனல்! டைமண் பட்டன், 10 லட்சம் கொரோனா நிவாரண நிதி…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திருப்பதிக்கு நெய் அனுப்பியதில் முறைகேடு – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பா?

Lekha Shree

இழுத்தடிக்கும் இடப் பிரச்சினை…. அத்துமீறியது பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகமா? அடம் பிடிக்கும் இசைஞானியா?

Tamil Mint

கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் லாக் டவுனை நீக்கிய அரசு, சரியான முடிவு தானா?

Tamil Mint

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள்

Tamil Mint

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களே அதிகம் உயிரிழப்பு- ஆய்வில் தகவல்!!!

Lekha Shree

துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!

suma lekha

கொரோனா பரவும் அபாயம்! – தடைகளை மீறி பக்தர்கள் ஆடி பெருக்கு வழிபாடு!

Lekha Shree

நோ கமெண்ட்ஸ்: விஜய்யின் அறிக்கை பற்றி எஸ்ஏசி

Tamil Mint

கொரோனா வார்டில் ஆய்வு செய்தது ஏன்? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

sathya suganthi

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

sathya suganthi

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் ரெய்டு.!

suma lekha

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree