a

தமிழகம்: 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு!


இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜூன் 14ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

ஆனால், தொற்று அதிகமாக உள்ள சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 11 மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில், சார்பதிவாளர் அலுவலகங்கள் நாளொன்றுக்கு 50% டோக்கன்கள் மட்டுமே பத்திரப்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நீலகிரி, குற்றாலம், கொடைக்கானல், ஏலகிரி, ஏற்காடு ஆகிய சுற்றுலா தலங்களுக்கு அவசர காரணத்துக்காக மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் இருந்து இ-பாஸ் பெற்ற பின்னரே அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Also Read  திமுக தேர்தல் பிரச்சாரப் பாடல் - ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி துரைமுருகன் வெளியீடு!

முன்னதாக நேற்று நடைபெற்ற ஆலோசனையில் கோவை, ஈரோடு, திருப்பூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தொற்று மிக தீவிரமாக உள்ளதால் இந்த மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றும் மற்ற மாவட்டங்களில் அத்தியாவசிய பணிகளுக்கு சில தளர்வுகளை அறிவிக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

அதன்படி இன்று தொற்று அதிகமாக உள்ள சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  உண்மையான மெர்சல் டாக்டர் காலமானார், கண்ணீரில் மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

`தமிழ்நாட்டை தமிழர் ஆள வேண்டும்’… சீமான் அசுர வளர்ச்சி அடைந்தது எப்படி?

Lekha Shree

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Tamil Mint

தக்காளி சாப்பிட்ட தங்கத்தமிழ் செல்வன்… கலக்கலான புகைப்படங்கள் இதோ!

Devaraj

அண்ணா அறிவாளயத்தில் வெற்றி கொண்டாட்டம்: காவல் ஆய்வாளர் முரளி பணி இடை நீக்கம்!

Lekha Shree

ஸ்டாலினிடம் கதறி அழுத சீமான்…! வைரலாகும் வீடியோ…!

sathya suganthi

பள்ளிகள் திறப்பது குறித்து ஆகஸ்ட் 10 அன்று முதல்வர் முக்கிய அறிவிப்பு

Tamil Mint

பொதுத் துறையான போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க தமிழக அரசு திட்டமா?

Tamil Mint

பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்; யாரை காக்க இந்த புதிய நாடாளுமன்றம்? – கமல்ஹாசன்

Tamil Mint

சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1000? எழுத்துப்பிழை என நா.த.க. விளக்கம்

Devaraj

வாகன காப்பீடு மோசடி வழக்கு; தீவிரமடையும் விசாரணை!

Tamil Mint

ஒரே ஒரு டெக்ஸ்ட் மெஸேஜ்… கிளிக் செய்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Lekha Shree

குஷ்பு பாஜகவில் சேர்ந்ததற்கு என்ன காரணம்? பரபரப்பு தகவல்கள்

Tamil Mint