நீரஜ் சோப்ரா, மிதாலி ராஜ் உள்ளிட்ட 12 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு..!


டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் உள்ளிட்ட 12 பேருக்கு இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருது (மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் இந்த விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது என அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

Also Read  நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி - கே.எல்.ராகுல் விலகல்..!

அதன்படி இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் பெரும் வீரர்களின் பட்டியலை நேற்று அறிவித்தது.

இதில் 12 விளையாட்டு வீரர்களுக்கு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு விருதுடன் ரூபாய் 25 லட்சம் ரொக்கப் பரிசும் கிடைக்கும்.

விருது பெரும் வீரர்கள்:

  1. நீரஜ் சோப்ரா
Also Read  "ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படலாம்!" - ஒலிம்பிக் போட்டி தலைவர்

2. மல்யுத்த வீரர் ரவிக்குமார் தஹியா.

3. குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன்

4. இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கோல்கீப்பர் பி. ஆர், ஸ்ரீஜேஷ்

5. இந்திய ஆண்கள் ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங்

6. இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்

7. கால்பந்து வீரர் சுனில் சேத்ரி

8. பாரா ஷூட்டர் அவனி லெகாரா

9. பாரா தடகள வீரர் சுமித் அண்டில்

Also Read  விவசாயிகள் போராட்டத்தில் உ.பி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு அனுமதி மறுப்பு

10. பாரா பேட்மிட்டன் வீரர்கள் பிரமோத் பகத் மற்றும் கிருஷ்ணா நகர்

11. பாரா ஷூட்டர் மனிஷ் நகர்

மேலும், 35 இந்திய விளையாட்டு வீரர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

நவம்பர் 13ம் தேதி மாலை 4:30 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் உள்ள தர்பார் மண்டபத்தில் விருது அறிவிக்கப்பட்ட வீரர்கள் இந்திய குடியரசு தலைவரிடமிருந்து விருதுகளை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் Ford கார் உற்பத்தி விரைவில் நிறுத்தம்? – 4,000க்கும் மேற்பட்டோர் வேலையிழக்கும் அபாயம்..!

Lekha Shree

கலக்கலான நடனத்தால் இணையவாசிகளை கவர்ந்த மும்பை காவலர்

suma lekha

2-வது மனைவிக்காக முதல் மனைவியை கொன்ற கணவர் கைது: என்னத்த சொல்ல…!

mani maran

183 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து அணி: – பும்ரா, ஷமி அசத்தல் பந்துவீச்சு

suma lekha

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றவர் சுட்டுக் கொலை

Tamil Mint

“இதனை சாப்பிட பயன்படுத்தலாம்” – பெற்றோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஸ்லேட் பென்சில் விளம்பரம்!

Shanmugapriya

உள்நாட்டு விமான கட்டணம் – நாளை மறுநாள் முதல் உயர்வு

sathya suganthi

இன்று முதல் கேஸ் சிலிண்டர் டெலிவரியில் முக்கிய மாறுதல்கள் அமல்.

Tamil Mint

மனிதர்களை அடுத்து விலங்குகளை வாட்டும் கொரோனா – விலங்கியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு தொற்று உறுதி…!

Lekha Shree

வாஜ்பாய்க்கு மோடி, அமித்ஷா அஞ்சலி

Tamil Mint

குவியல் குவியலாக எரியூட்டப்படும் மனித உடல்கள் – கொரோனாவின் கோர தாண்டவம்

Devaraj

கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு

sathya suganthi