காஷ்மீரில் கூட்ட நெரிசலில் பலியான 12 பக்தர்கள்… பிரதமர் மோடி இரங்கல்!


காஷ்மீரில் மாதா வைஷ்ணவி தேவி பவனில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்ரா நகரில் மாதா வைஷ்ணவி தேவி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பக்தர்கள் அதிக அளவில் இந்த கோவிலுக்கு யாத்திரையாக வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். ஆங்கில புது வருட பிறப்பினை முன்னிட்டு மாதா வைஷ்ணவி தேவி பவன் பகுதியருகே கோவில் பக்தர்கள் அதிக அளவில் கூடியுள்ளனர்.

Also Read  நிவாரணம் கேட்ட நபரிடம் விரக்தியாக பேசிய முதல்வர்... வைரலாகும் ஆடியோ..!

அவர்களில் ஒரு பிரிவினரிடையே அதிகாலை 2.45 மணியளவில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில், தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தள்ளி விட்டுள்ளனர். இதில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. பலர் நெரிசலில் சிக்கி காயமடைந்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுபற்றி சமூக சுகாதார மையத்தின் மருத்துவர் கோபால் தத் கூறும்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்து உள்ளனர். 13 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் நாராயணா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். எனினும், இந்த எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.

Also Read  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.25 குறைப்பு…! - அதிரடி காட்டிய ஜார்கண்ட் முதல்வர்..!

இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “காஷ்மீரில் மாதா வைஷ்ணவி தேவி பவனில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.

இந்த சம்பவம் பற்றி காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா மற்றும் மந்திரிகள் ஜிதேந்திரா சிங் மற்றும் நித்யானந்தராய் ஆகியோருடன் பேசியுள்ளேன். தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கூறியுள்ளேன்” என்று தெரிவித்து உள்ளார்.

Also Read  மார்ச் முதல் மே வரை வெயில் வாட்டி வதைக்கும் - இந்திய வானிலை மையம் அதிர்ச்சி ரிப்போர்ட்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அனைவருக்கும் இலவச தடுப்பூசி: பீகார் தேர்தலில் பாஜக அதிரடி

Tamil Mint

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 18,522 பேருக்கு கொரோனா-418 பேர் பலி- தமிழகம் மீண்டும் 2-வது இடம்

Tamil Mint

தனியாரின் பகல்கொள்ளை.. உலகளவில் இந்தியாவில் தான் கொரோனா தடுப்பூசியின் விலை அதிகம்..

Ramya Tamil

Double Mask அணிவதால் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்கலாமா…!

Devaraj

ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார்

Tamil Mint

கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Tamil Mint

‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ – புதிய கட்சி துவங்கிய கேப்டன் அமரிந்தர் சிங்..!

Lekha Shree

வேலையை இழந்து வெளிநாடுகளில் இருந்து கேரளா திரும்பிய 10 லட்சம் பேர்…!

sathya suganthi

கொரோனா மையத்தில் மது விருந்து… ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

Lekha Shree

வாட்ஸ் அப்-ல் நம்பர் சேவ் செய்யாமல் எப்படி மெசேஜ் அனுப்புவது? இதோ சூப்பர் டெக்னிக்…!

sathya suganthi

புதுச்சேரியில் கைநழுவிய துணை முதலமைச்சர் பதவி – பாஜக பக்கம் போன முக்கிய இலாக்கா…!

sathya suganthi

“எங்கள் உணர்ச்சிகளுடன் விளையாடினார் கோலி… அதனால் வென்றோம்!” – டீன் எல்கர்

Lekha Shree