“12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் தயார்” – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி


12ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் தயார் நிலையில் இருக்கிறது என்றும் மீண்டும் ஒரு முறை சரிபார்த்து விரைவில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

ஜூலை 31ம் தேதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் ஜூலை 16ம் தேதிக்குள் முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் கசிந்தது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் மதிப்பெண் வழங்கும் முறை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் 50% பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வில் எழுத்துமுறை பெற்ற மதிப்பெண் 20% எடுத்துக்கொள்ளப்படும்.

Also Read  தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் 16.10.20

செய்முறை தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் இருந்து 30% எடுத்துக் கொள்ளப்படும். பன்னிரண்டாம் வகுப்பு செய்முறைத் தேர்வில் பங்கு பெறாத மாணவர்களுக்கு பதினோராம் வகுப்பு செய்முறைத் தேர்வில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

தேர்வு நிலைகளில் ஒன்றில் கூட பங்குபெறாத மாணவர்கள் தனித் தேர்வர்களாக தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.

Also Read  தேர்தல் வெற்றிக்கு பிந்தைய கொண்டாட்டங்களுக்கு தடை… தேர்தல் ஆணையம் அதிரடி!

கணக்கிடப்படும் மதிப்பெண் தமக்கு குறைவாக இருப்பதாக நினைக்கும் மாணவர்கள் கொரோனா நிலை சீரடைந்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.

ஜூலை 31-ஆம் தேதிக்குள் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் அரசு தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்படும்” என தெரிவிக்கப்பட்டது.

Also Read  தமிழகத்தில் ஒருவருக்கு பச்சை பூஞ்சை நோய்...! மூக்கிலிருந்து கொட்டும் ரத்தம்...! அறிகுறி என்ன?

இந்நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் தயார் நிலையில் இருக்கிறது என்றும் மீண்டும் ஒரு முறை சரிபார்த்து விரைவில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு? – முதலமைச்சர் இன்று ஆலோசனை!

Lekha Shree

அடையாளத்தை மறைக்கும் பாஜக…! அதிமுக பெயரை சொல்லி ஓட்டு கேட்கும் எச்.ராஜா…!

Devaraj

விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது: முதல்வர் பழனிசாமி

Tamil Mint

11 எம்எல்ஏக்களின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போகும் சபாநாயகர்

Tamil Mint

ஏடிஎம் இயந்திரத்தையே ஏமாற்றி கொள்ளை – இனி பணம் எடுக்க தடை!

Lekha Shree

எனக்கு இந்தி தெரியுமா? உண்மையை உடைக்கும் கனிமொழி

Tamil Mint

தமிழகம்: மயிலாடுதுறை தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உருவாகவுள்ளது

Tamil Mint

கோயம்பேடு மார்க்கெட் குடோன் ஏலத்தில் ரூ. 17 கோடி இழப்பு..! வியாபாரிகள் எதிர்ப்பு!

Tamil Mint

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? – விகடன் கருத்துக்கணிப்பு!

Lekha Shree

ரெம்டெசிவிர் முன்பதிவுக்கான இணையதள வசதி அறிமுகம்

sathya suganthi

பாரம்பரிய கலைகளை அழித்து விடாதீர்கள்: சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

Tamil Mint

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை

Tamil Mint