“மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்” – பிசிசிஐ துணை தலைவர்


14வது ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.

இன்று பிசிசிஐ தலைவர் கங்குலி தலைமையில் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. அதில் துபாய், சார்ஜா, அபுதாபியில் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 10க்குள் எஞ்சிய போட்டிகளை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Also Read  ஷிகர் தவான் தலைமையில் கோப்பையை வென்றது இளம் இந்திய அணி…! இலங்கை ஆறுதல் வெற்றி!

கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 60 போட்டிகளில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் வீரர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த தொடரை தற்காலிகமாக ஒத்திவைத்தது பிசிசிஐ.

கொல்கத்தா அணியை சேர்ந்த வீரராகள் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் மற்றும் சென்னை அணியை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மிரண்டுபோன பிசிசிஐ இந்த ஐபிஎல் சீசனை தற்காலிகமாக நிறுத்தியது.

Also Read  ஐபிஎல் 2021: போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி…!

இந்நிலையில் மீதமுள்ள 31 போட்டிகளையும் டி20 உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

அப்படி ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட்டால் ஐக்கிய அரபு அமீரகம் அல்லது பிரிட்டனில் நடத்தப்படலாம் எனவும் தகவல் வெளியானது.

Also Read  இந்தியா- இங்கிலாந்து 2வது டெஸ்ட்: இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் அப்டேட் இதோ

இந்நிலையில், பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா 14வது ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐசிசி தரவரிசை – இந்திய வீரர்கள் முன்னேற்றம்!

Devaraj

ஐசிசி சிறந்த வீரருக்கான விருது – தொடரும் இந்திய வீரர்களின் ஆதிக்கம்!

Devaraj

குணத்திலகாவின் சர்ச்சை அவுட் – ஹோப்பின் அதிரடி சதத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!

Jaya Thilagan

பாராலிம்பிக்ஸ்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்… இந்திய வீரர் சுமித் அண்டில் உலக சாதனை..!

Lekha Shree

இந்திய கிரிக்கெட் வீரர் மாயாங் அகர்வால் வெளியிட்ட போட்டோ… கலாய்த்த நியூசிலாந்து வீரர்…!

Lekha Shree

தமிழக வீராங்கனை பவானி தேவியின் உருக்கமான பதிவு… உடனே பதிலளித்த பிரதமர் மோடி..!

Lekha Shree

டோக்கியோவில் ஓங்கி ஒலிக்கும் தமிழர்களின் குரல்! – ஒலிம்பிக்கில் பங்கேற்கும் மேலும் 5 தமிழர்கள்!

Lekha Shree

ஐபிஎல்லில் ஊக்கமருந்து பயன்படுத்தப்படுகிறதா? அதிரடி சோதனை நடத்த முடிவு

Tamil Mint

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களை தொடர்ந்து கிரிக்கெட் வீராங்கனைக்கும் கொரோனா!

HariHara Suthan

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விராட் கோலி!

Lekha Shree

நீரஜ் சோப்ரா மருத்துவமனையில் அனுமதி – பாதியில் நின்ற வரவேற்பு நிகழ்ச்சி..!

Lekha Shree

பந்தில் எச்சில் தடவிய இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டோக்ஸ் – எச்சரித்த நடுவர்கள்!

Lekha Shree