ராட்சத அலையில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு!!! 20 பேர் மாயமானதாக தகவல்…..


மியான்மரில் புத்த மடாலயத்துக்கு வழிபாடு நடத்த சென்ற 15 பேர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

மியான்மரின் மோன் மாகாணத்தில் தன்புசாயத் என்கிற சிறிய தீவில் பழமையான புத்த மடாலயம் ஒன்று உள்ளது. கடலின் நடுவில் அமைந்துள்ள மடாலயத்துக்கு மக்கள் படகுகளில் சென்று வழிபாடு நடத்துவது வழக்கம்.  இந்தநிலையில் நேற்று காலை உள்ளூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த மடாலயத்தில் வழிபாடு நடத்துவதற்காக படகில் சென்றனர். அப்போது கடல் சற்று கொந்தளிப்புடன் காணப்பட்டதாக தெரிகிறது.

Also Read  ஒரே ஒரு திராட்சை பழத்தின் விலை ரூ.35 ஆயிரமா?

பக்தர்களின் படகு மடாலயத்தை நெருங்கியதும், அனைவரும் படகில் இருந்து இறங்கி கடலில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கடலில் ராட்சத அலை எழுந்தது. இதனால் பக்தர்கள் அனைவரும் நிலைதடுமாறி நீரில் விழுந்தனர். அதன்பின்னர் அவர்களை ராட்சத அலை கடலுக்குள் இழுத்து சென்றது. இதனால் பெரும் பதற்றமும், பீதியும் உருவானது.

இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர். மீட்பு படகுகளில் சென்று, கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் 15 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. அதே வேளையில் ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டு கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த பலரை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

Also Read  ஈஸ்டர் முட்டைகளில் போராட்டத்தை முன்னெடுத்த மக்கள்...! கண்ணையும் கருத்தையும் கவர்ந்த புகைப்படங்கள்...!

மேலும் இந்த விபத்தில் 20-க்கும் அதிகமானோர் மாயமானதாக தெரிகிறது. அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மரண பீதியில் செய்தி வாசித்த செய்தியாளர்: காரணம் என்ன தெரியுமா.?

mani maran

ஆடை குறைப்பே பாலியல் வன்கொடுமைக்கு காரணம் – பாகிஸ்தான் பிரதமர்

Shanmugapriya

முகக்கவசம் அணியாமல் சர்ச்சையில் சிக்கிய அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன்

Tamil Mint

20 வயதுக்குட்பட்ட இளைஞர்களை அதிகம் பாதிக்கும் ‘டெல்டா’ வகை தொற்று…!

Lekha Shree

ஏவுகணையை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

Tamil Mint

நடுரோட்டில் குழந்தையை கூவி கூவி விற்ற தந்தை..! – வைரலாகி வரும் வீடியோ..!

Lekha Shree

“தினமும் மதியம் பழைய சாதம் தான்” – குடும்பத்திற்காக தியாகம் செய்யும் செக்யூரிட்டி!

Shanmugapriya

அடர் பிங்க் நிறத்தில் மாறிய ஏரி… துர்நாற்றத்தால் மக்கள் அவதி… வெளியான ‘பகீர்’ உண்மை!

Lekha Shree

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் திடீர் புகை!

suma lekha

வேட்டைக்காரர்களிடம் இருந்து தப்ப கலைமான்கள் கையாண்ட யுக்தி… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

‘ரவுடி பேபி’ பாடல் மெட்டில் புத்தி சொன்ன மருத்துவர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

சென்னை டு பாரிஸ் – நேரடி விமான சேவை தொடக்கம்..!

Lekha Shree