30க்கும் மேற்பட்டோரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 15 வயது சிறுமி…! 28 பேர் கைது..!


15 வயது சிறுமி ஒருவர் 30க்கும் மேற்பட்டவர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள டொம்பிவிலி பகுதியில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 15 வயது சிறுமி ஒருவர் 9 மாதங்களாக 30க்கும் மேற்பட்டவர்களால் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமியே கடந்த புதன்கிழமை காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போதுதான் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அந்த சிறுமி அளித்த புகாரில், அந்த சிறுமியை கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதியன்று நண்பர் ஒருவர் பலவந்தமாக பாலியல் வன்புணர்வு செய்து, அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார்.

Also Read  இளைஞரின் செல்போனை உடைத்து கன்னத்தில் அறைந்து ஆட்சியர் - வைரலாகும் வீடியோ

பின்னர் அந்த வீடியோவை வைத்து மிரட்டி அச்சிறுமியை மேலும் சில முறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

பின்னர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வீடியோவை அந்த நபர் தனது நண்பர்கள் சிலருக்கு பகிர அவர்களும் அப்பெண்ணை வெவ்வேறு இடங்களுக்கு மிரட்டி அழைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

இப்படி 33 பேர் அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த்துளள்னர். அந்த 33 பேரும் 16 முதல் 23 வயது உடையவர்கள். இதில் இருவர் மைனர்கள்.

அந்த 33 பேரின் பெயர்களையும் காவல்துறையினரிடம் அச்சிறுமி கூறியதன் பேரில் அதில் 28 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் தற்போது எஞ்சியவர்களை தேடி வருகிறார்கள்.

Also Read  கொரோனா புதிய உச்சம் - இந்தியர்கள் அமெரிக்கா செல்ல தடை!

சிறுமியின் நடவடிக்கை சற்று மாறியிருந்ததால் அவரின் உறவினர் ஒருவர் இதுகுறித்து விசாரித்தபோது நடந்தவற்றை சிறுமிகளிடம் தெரிவித்திருக்கிறார்.

இதனை அடுத்து சமூக செயற்பாட்டாளர் ஒருவரின் உதவியை நாடி இதுகுறித்து ஆலோசித்த போது அவர் குற்றவாளிகளை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் யோசித்துள்ளார்.

Also Read  முதல்வர் உத்தவ் தாக்கரேவை அறைவேன் எனக்கூறிய மத்திய அமைச்சர் கைது..!

அப்போது சிறுமியை மிரட்டி வந்தவர்களில் ஒருவரை சிறுமியை தொடர்புகொள்ள செய்துள்ளார். அந்த நபர் சிறுமியை குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்து சென்று கொண்டிருந்தபோது சிறுமியின் குடும்பத்தினர் ஆட்டோவில் அவர்களைப் பின் தொடர்ந்துள்ளனர்.

இந்த நேரத்தில் ஆட்டோ திடீரென பழுதாகி நின்று விட சிறுமி தனது இருப்பிடம் குறித்து ஷேர் செய்துள்ளார். அதை வைத்து குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்கள்.

இந்த கொடூர சம்பவம் தற்போது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்புக்குள்ளான இந்திய கிரிக்கெட் வீரர்…!

Lekha Shree

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 69,652 பேருக்கு கொரோனா தொற்று

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு – மத்திய அரசு விளக்கம்

Devaraj

காசு.. பணம்.. துட்டு.. மணி, மணி… ஒரே நாளில் லட்சாதிபதியான நபர்.!

suma lekha

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 10 குறைப்பு! – தேர்தல் யுத்தியா?

Shanmugapriya

“அடுத்த இலக்கு ஷாருக்கான் தான்!” – மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்

Lekha Shree

இந்திய ட்விட்டர் தலைமை மீது வழக்கு…! மத வெறுப்பை தூண்டுவதாக புகார்…!

sathya suganthi

நாயை அதன் பெயர் சொல்லி அழைக்காததால் அக்கம் பக்கத்தினரை தாக்கிய நபர்!

Shanmugapriya

கொரோனா பாதிப்பால் நேற்று 1,129 பேர் உயிரிழந்துள்ளனர்

Tamil Mint

ஏர் இந்தியா விமானங்கள் வருகைக்கு ஹாங்காங் திடீர் தடை:

Tamil Mint

பத்ரிநாத், கேதார்நாத் யாத்திரைக்கு தடை…! பாஜக அரசுக்கு கடிவாளம் போட்ட நீதிமன்றம்…!

sathya suganthi

நடிகர் சூர்யாவை கவர்ந்த பாடல் ட்விட்டர் பக்கத்தில் புகழாரம்…

VIGNESH PERUMAL