ரோகித்- சூர்யகுமார் அதிரடி… நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி.!


இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பையை தொடர்ந்து இந்தியா- நியூசிலாந்து அணி 3 போட்டிக்கள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. விராட் கோலி டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்படத்தை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்த தொடரில் இளம் இந்திய படை களமிறங்கியுள்ளது.

Also Read  இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்புக்குள்ளான இந்திய கிரிக்கெட் வீரர்…!

இந்நிலையில் இந்த தொடரின் முதல் போட்டி நேற்று ஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் அமைந்துள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி சார்பில் மார்டின் கிப்டில் 70 ரன்களும் சாம்பா 63 ரன்களும் குவித்தனர்.

Also Read  கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விராட் கோலி!

இதனை தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

இந்திய அணி சார்பில் கேப்டன் ரோகித் சர்மா 48 ரன்களும், சூர்ய குமார் யதவ் 60 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற செய்தனர். இதற்கிடைட்யில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 பந்துகளில் 60 ரன்கள் எடுத்த சூர்ய குமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

Also Read  ஐபிஎல் 2021: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணி… சிஎஸ்கே சூப்பர் வெற்றி..!

இதனை தொடர்ந்து இந்தியா- நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தென் ஆப்பிரிக்கா பாகிஸ்தான் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி – கோப்பையை வெல்ல போவது யார்?

Jaya Thilagan

4-வது டெஸ்ட் போட்டி: இந்திய பவுலர்களின் சூழலில் சுருண்டது இங்கிலாந்து!!!

Lekha Shree

பொலந்து கட்டிய மேக்ஸ்வெல் – டி வில்லியர்ஸ்!

Devaraj

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்று பெற்ற இந்தியா…! 5 கோடி போனஸ் அறிவித்த பிசிசிஐ…!

Tamil Mint

சென்னை 2வது டெஸ்ட்: இந்தியா வெற்றி பெறுமா?

Tamil Mint

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்சமாமுக்கு திடீர் நெஞ்சுவலி.!

suma lekha

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள்: எங்கு, எப்போது

Tamil Mint

விராட் கோலி, அனுஷ்கா சர்மா குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்! – ஆச்சரியத்தில் மூழ்கிய இணையவாசிகள்!

Shanmugapriya

பாபர் அசாம் ஜெர்ஸியால் சர்ச்சை: இந்தியாவை வம்புக்கு இழுக்கும் பாகிஸ்தான்.!

mani maran

மகாராஷ்டிராவில் ஊரடங்கு – ஐபிஎல் க்கு தடை வராது என கங்குலி உத்தரவாதம்!

Jaya Thilagan

டோக்கியோ ஒலிம்பிக்: வில்வித்தை காலிறுதி போட்டியில் தீபிகா குமாரி தோல்வி!

suma lekha

சென்னை டெஸ்ட்: 6 விக்கெட்டுகள் இழந்து இந்தியா தடுமாற்றம்! சொதப்பிய கோலி… அசத்திய ரோஹித்…!

Tamil Mint