ரயிலில் பயணம் செய்ய இது எல்லாம் கட்டாயம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!!


சென்னை புறநகர் ரயில்களில் பயணம் செய்ய இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் திரிபான ஒமிக்ரான் பரவல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஜனவரி 6 முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Also Read  திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் காலமானார்…!

அத்துடன் மேலும் சில புதிய கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி,புறநகர் ரயிலில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் எனவும் ரயில் நிலையத்தில் அல்லது பயணம் செய்யும்போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Also Read  வீரியம் எடுக்கும் கொரோனா! - அபாயத்தை நோக்கி இந்தியா?

மேலும், இந்த புதிய கட்டுப்பாடுகள் ஜனவரி 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

முன்னதாக, சென்னை புறநகர் ரயில் ஞாயிற்று கிழமைகளில் குறைந்த அளவில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read  மதுரை: மேம்பாலம் இடிந்து விழுந்த விவகாரம்… சிறப்பு குழு ஆய்வு செய்ய அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா வைரஸ் காற்றில் பரவுவதற்கு சாத்தியங்கள்-உலக சுகாதார நிறுவனம்

Tamil Mint

அரசியல் சண்டைகளை நீதிமன்றத்துக்கு கொண்டு வருவது ஏன்? – தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி

Tamil Mint

இன்றைய முக்கிய செய்திகள்…!

Lekha Shree

நடிகர் செந்தில் போலி டுவிட்டர் கணக்கு – விஷமிகளை வலை வீசி தேடும் போலீசார்…!

sathya suganthi

விரைவில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000? – அமைச்சர் தெரிவித்த ஹேப்பி நியூஸ்..!

Lekha Shree

விருப்பமனு கொடுத்தவர்களிடம் திமுக நேர்காணல்: ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!

Lekha Shree

தணிகாச்சலத்திற்கு நிபந்தனை ஜாமீன்

Tamil Mint

ரெம்டெசிவிர் முன்பதிவுக்கான இணையதள வசதி அறிமுகம்

sathya suganthi

நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த சசிகலா..! காரணம் இதுதான்..!

Lekha Shree

இன்றைய தலைப்புச் செய்திகள் | 26.05.2021

sathya suganthi

தேசிய கொடியை அவமதிப்பு செய்த வழக்கில் எஸ்.வி சேகர் சைபர் கிரைம் பிரிவில் ஆஜர்.

Tamil Mint

“பிச்சை எடு” என கூறிய நெட்டிசனுக்கு தக்க பதிலடி கொடுத்த ‘கேப்டன்’ மகன்..!

Lekha Shree