உத்தரப்பிரதேசத்தில் 2 பேருக்கு கப்பா வைரஸ் தொற்று உறுதி…!


நாட்டை கதிகலங்க செய்து வரும் கொரோனா வைரஸ் உருமாறி மக்களை அச்சமூட்டி வருகின்றது.

அந்தவகையில் ஆல்பா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் இரண்டு பேருக்கு கப்பா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

லக்னோவின் கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்றவர்கள் இருவரின் ரத்த மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்தும் போது கப்பா வைரஸ் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அம்மாநிலத்தில் 107 பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதும் உறுதியாகியுள்ளது.

Also Read  கிரெட்டா துன்பெர்க் மீது எப்ஐஆர் பதிவு செய்தது டெல்லி போலீஸ்

உருமாறிய கொரோனா வைரஸை எளிதாக கண்டறியும் வகையிலும் அடையாளப்படுத்தும் வகையிலும் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

இதன்படி B.1.617.1 வகை வைரஸுக்கு கப்பா என்றும் B.1.617.2 வகை வைரஸ் டெல்டா என்றும் பெயரிடப்பட்டு உள்ளது.

பிரிட்டனில் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் B.1.1.7 வைரஸை ஆல்ஃபா என்றும் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட B.1.351 பீட்டா என்றும் பிரேசிலில் கண்டறியப்பட்ட வைரஸ் காமா என்றும் பெயரிடப்பட்டு உள்ளது.

அதேபோல் இந்தியாவில் கண்டறியப்பட்ட இரு வைரஸ்களுக்கு கப்பா என்றும் டெல்டா, டெல்டா பிளஸ் என்றும் பெயரிடப்பட்டு உள்ளது.

Also Read  அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை 2 கி.மீ தூரம் தோளில் சுமந்து சென்ற பெண் எஸ்.ஐ! - குவியும் பாராட்டுகள்!

அந்தவகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2 பேருக்கு கப்பா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “கப்பா, ஆல்பா, டெல்டா ஆகிய மூன்றுமே உத்தரப்பிரதேசத்தில் இருக்கின்றன. இவை அனைத்துமே தற்போது வழங்கப்படும் சிகிச்சை முறைகளுக்கு கட்டுப்பட்ட கூடியவை தான்.

Also Read  கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

தற்போது மாநிலத்தில் பாசிட்டிவிட்டி ரேட் 0.04% என்ற அளவில் இருக்கிறது. கப்பா வைரஸ் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை. இதுவும் மருத்துவ சிகிச்சையால் குணப்படுத்த கூடியதாகவே இருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே எந்த மாநிலத்தில் இருக்கிறது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை” என கூறினர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கேரள தங்கக் கடத்தல் வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Tamil Mint

15,000 பள்ளிகளை தரம் உயர்த்த பட்ஜெட்டில் முடிவு

Tamil Mint

கொரோனா தடுப்பூசி : அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா செய்த சாதனை…!

sathya suganthi

சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜிக்கு கொரோனா…!

Lekha Shree

பிளாட்டுக்கு வரச் சொன்னார் கேரள சபாநாயகர்… மீண்டும் பரபரப்பை கிளப்பும் ஸ்வப்னா சுரேஷ்…!

Devaraj

விவாசயிகள் போராட்டத்தில், பிரதமர் மோடியின் மவுனம் குறித்து கேள்வி கேட்ட ராகுல் காந்தி

Tamil Mint

ஐ.நா. வின் மனித மேம்பாட்டு குறியீடு: இந்தியா சரிவு!

Tamil Mint

அளவுக்கு அதிகமாக குடித்ததால் மயக்கமடைந்த தாய்! – பசியால் மயக்கமடைந்து உயிரிழந்த பச்சிளம் குழந்தை!

Shanmugapriya

இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு சுங்கக்கட்டணம் – மத்திய அரசு

Tamil Mint

6 மாத குழந்தையை கண்மூடித்தனமாக அடித்த தாய்… காரணம் இதுதான்..!

Lekha Shree

ஊரடங்கு மேலும் நீட்டிப்பு.. எப்போது வரை தெரியுமா..?

Ramya Tamil

“மேற்குவங்கத்தில் அடுத்து பாஜக ஆட்சிதான் அமையும்” – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Tamil Mint