இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி! – மத்திய அரசு


இந்தியாவில் இரண்டு பேருக்கு ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கர்நாடகாவில் 66 மற்றும் 46 வயதான 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக தென்னாப்பிரிக்காவில் கண்டறிப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமைக்ரான் வைரஸ் 12 நாடுகளுக்கு பரவியிருந்த நிலையில், 23 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

Also Read  மத்திய அரசிடம் கொத்தடிமை போன்று கையேந்தும் நிலைதான் உள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், சீனா, மொரிஷியஸ், போட்ஸ்வானா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட இந்த ஒமைக்ரான் வைரஸ் தற்போது ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.

மேலும், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் முதல்முறையாக தென்னாபிரிக்கா பயணி ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு மிதமான பாதிப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Also Read  ஐ.டி.ஊழியர்களாக நீங்கள்…! உங்களுக்காக பிரதமர் மோடி போட்ட சூப்பர் டுவிட் இதோ…!

மேலும், இதுவரை இந்த ஒமைக்ரான் தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை என கூறப்பட்டுள்ளது. ஆனால், உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்களில் பரிசோதனையை முடுக்கிவிட்டுள்ளன.

காட்டாய தனிமைப்படுத்துதல் போன்றவற்றையும் கடைபிடிக்குமாறு சர்வதேச பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும், தமிழகத்தில் இதுவரை யாரும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படவில்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கர்நாடகாவில் 66 மற்றும் 46 வயதான 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Also Read  ஏப்ரல் 11 முதல் 14 வரை 'தடுப்பூசி திருவிழா' - மத்திய அரசு திட்டம்!

இவ்வாறு வேகத்தில் 23 நாடுகளுக்கு இந்த தொற்று பரவியுள்ளது மக்களை பீதியடைய செய்துள்ளது. மீண்டும் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஊழல் செய்பவர்களுக்கு பிரதமர் எச்சரிக்கை

Tamil Mint

செல்போன் பேட்டரி வெடித்து சிறுவன் உயிரிழப்பு! – யாருக்கும் சொல்லாமல் அடக்கம் செய்த உறவினர்கள்!

Shanmugapriya

பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தீவிரம்!

Tamil Mint

பி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது:

Tamil Mint

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பினை காணலாம்.

mani maran

வெடித்து சிதறிய ஏடிஎம் எந்திரம்..! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!

Lekha Shree

காதலர் தின கொண்டாட்டம்: வெளிநாடுகளுக்கு ரோஜா ஏற்றுமதி 80 சதவீதம் பாதிப்பு – விவசாயிகள் வேதனை!

Tamil Mint

பெங்களூரு-ஜோலார்பேட்டை இடையே மீண்டும் மெமு ரெயில் சேவை தொடக்கம்: தென்மேற்கு ரெயில்வே அறிவிப்பு

Tamil Mint

“சொத்து கேட்டு மகன் தொல்லை” நீதிபதிக்கு சொத்தை எழுதித் தந்த முதியவர்….

Lekha Shree

தூது செல்ல நான் தயார்.! உங்க மாமா அனுமதிப்பாரா.? தயாநிதி மாறனை கலாய்த்த அண்ணாமலை.

mani maran

புதிய வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தபின் விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாகும்: ராஜ்நாத் சிங்

Tamil Mint

’குழந்தைகள் செல்போனில் பார்ப்பவைகள் கட்டுப்படுத்தப்படவில்லை’ – ஆர்.எஸ்.எஸ் தலைவர் கருத்து..!

suma lekha