செங்கல்பட்டில் என்கவுண்டர் செய்யப்பட்ட 2 ரவுடிகள்…! நடந்தது என்ன?


செங்கல்பட்டில் இரண்டு ரவுடிகளை போலீசார் என்கவுன்டர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு கே.கே. தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (30). இவர் நேற்று மாலை செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையம் எதிரே உள்ள டீக்கடைகளில் டீ குடிக்க வந்துள்ளார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கொண்ட கும்பல் திடீரென நாட்டு வெடிகுண்டு வீசி கார்த்திகை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்த மகேஷ் (22) வீட்டுக்கு இந்த மர்ம கும்பல் சென்றுள்ளது.

Also Read  பீலா ராஜேஷ் கணவர் ராஜேஷ் தாஸ் மீது பெண் எஸ்.பி. பாலியல் புகார்! முழு விவரம்!

இவரது வீடு செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அப்போது மகேஷ் தனது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்.

திடீரென உள்ளே நுழைந்த மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி மகேஷை கொன்றுள்ளனர்.அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடந்த சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read  அதிமுக 160 இடங்களில் வெல்ல வேண்டும்: நிர்வாகிகளுக்கு எடப்பாடி கட்டளையா?

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். இந்த சூழ்நிலையில் வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கில் இன்று காலை செங்கல்பட்டு நகர காவல் நிலையம் அருகே தினேஷ் மொய்தீன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

உத்திரமேரூர் பகுதியில் இருந்து கைதானவர்களை அழைத்து வந்தபோது இருவரும் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கியதாகவும் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.

Also Read  வேலூர்: கள்ள ஓட்டு போட முயன்ற திமுக பிரமுகர்… தட்டிக்கேட்ட அதிமுக பிரமுகருக்கு கத்திக்குத்து..!

இதில் தினேஷ், மொய்தீன் ஆகிய இருவரும் உயிரிழந்து உள்ளதாக தகவல் முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் குண்டு தாக்குதலில் காயமடைந்த 2 போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரு மழைக்கே தாங்காத ஸ்மார்ட் சிட்டி தடுப்புச் சுவர்; கோவையின் அவலம்

Devaraj

தமிழகத்தில் அடிக்கடி மின்வெட்டு – காரணத்தை விளக்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி…!

sathya suganthi

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

Tamil Mint

வேலைக்கு வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட உரிமையாளர்….

VIGNESH PERUMAL

ரேஷன் கடைகளில் இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டம் – முதல்வர் தொடங்கி வைத்தார்

Tamil Mint

“இந்த மாதம் எங்களுக்கு 2 கோடி தடுப்பூசி கொடுங்க” : மத்திய அரசிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்.

mani maran

ஆளுநர் உரை : தமிழகத்துக்கு குட் நியூஸ்…! இந்தியாவுக்கு பேட்நியூஸ்…!

sathya suganthi

செம்பரம்பாக்கம் ஏரியில் மீண்டும் தண்ணீர் திறப்பு

Tamil Mint

ஸ்டாலின் பதவியேற்பு விழா – யார் யாரெல்லாம் பங்கேற்பு – முழு விவரம் இதோ…!

sathya suganthi

இவர்களுக்கு தான் அமைச்சர் பதவி.. ஸ்டாலின் முடிவால் அப்செட்டில் திமுக சீனியர்கள்..

Devaraj

தி.நகர்,ரெங்கநாதன் தெருவில் கடைகளை திறக்க அனுமதியில்லை- சென்னை மாநகராட்சி அதிரடி

suma lekha

விவசாயிகளுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துச் செய்தி

Tamil Mint