a

ஆக்சிஜன் சிலிண்டர் எனக்கூறி தீ அணைப்பான்களை விற்ற 2 பேர் கைது…!


டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையாக ஆக்சிஜன் சிலிண்டர் எனக்கூறி தீ அணைப்பான்களை விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆக்சிஜன் சிலிண்டருக்கு பதிலாக தீ அணைப்பான்களை இரண்டு நபர்கள் தன்னிடம் விற்று ஏமாற்றியதாக கீதா அரோரா என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.

அதில், உறவினர் ஒருவருக்கு கொரோனா தொற்றால் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டதாகவும் படுக்கை பற்றாகுறை காரணமாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்க இயலவில்லை என்றும் குறிப்பிட்டிருந்த கீதா, இதையடுத்து ஆக்சிஜின் சிலிண்டராவது ஏற்பாடு செய்யலாம் என எண்ணி அசுதோஷ் செளகான், ஆயுஷ் குமார் ஆகியோர் தொடர்பு கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த இருவரும் ரூ.10,000 பணத்தை பெற்றுக்கொண்டு, 2 சிலிண்டர்களை கொடுத்துச் சென்றதாகவும் சற்று நேரம் கழித்துதான் அது ஆக்சிஜன் சிலிண்டர் இல்லை தீ அணைப்பான் என்பது தெரியவந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  ஸ்கூட்டரில் நாயை கட்டி இழுத்து சென்ற கொடூரம்…! வைரலாகும் வீடியோ…!

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், சிசிடிவி கேமரா உதவியுடன் அசுதோஷ் செளகான், ஆயுஷ் குமாரை கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் போலீசாரிடம் நடந்த விசாரணையில், தற்போது ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாடு நெருக்கடி சூழ்நிலையை பயன்படுத்தி, மக்களிடம் தீ அணைப்பான்களை ஆக்சிஜன் சிலிண்டர் என மோசடி செய்து விற்பனை செய்தது தெரியவந்தது.

Also Read  ராமர் கோயில் கட்ட அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க வேண்டும்: உ.பி. அரசு

அவர்களிடமிருந்து ஐந்து தீ அணைப்பான்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கேரளா: கன்னியாஸ்திரி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

Tamil Mint

நவம்பர் 28 அன்று ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை ஆய்வு செய்கிறார் பிரதமர் மோடி

Tamil Mint

18+ அனைவருக்கும் தடுப்பூசி போட முடியாது…! தட்டுப்பாட்டால் திணறும் மாநிலங்கள்…!

Devaraj

மேற்கு வங்கத்திலிருந்து திரிணமுல் காங்கிரசை வேரோடு அகற்ற வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Tamil Mint

கொரோனா 2ம் அலை எதிரொலியால் குறையும் ரத்த இருப்பு…!

Lekha Shree

கொரோனா தொற்றால் உருவாகியுள்ள மற்றொரு ஆபத்து! 7 மாதங்களில் 33 ஆயிரம் டன் மருத்துவக் கழிவுகள்!

Tamil Mint

கொரோனா புதிய சிந்தனையை புதிய தெளிவை ஏற்படுத்தி இருக்கிறது: மோடி பேச்சு

Tamil Mint

அசாமில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 50% இட ஒதுக்கீடு – காங்கிரஸ் வாக்குறுதி!

Lekha Shree

சர்வதேச மல்யுத்த போட்டியில் முதல் தங்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை!

Lekha Shree

விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைப்படியே வேளாண் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது – பிரதமர்

Tamil Mint

கொல்கத்தாவில் உள்ள உணவகத்தில் ஜாலியாக நடனமாடிய வயது முதிர்ந்த தம்பதி! – வைரலாகும் வீடியோ!

Tamil Mint

தேசிய சித்தா தினம் இன்று கொண்டாடப்படுகிறது

Tamil Mint