20% இடஒதுக்கீடு வழங்க கோரி பாமகவினர் போராட்டம்


இன்று காலை, சென்னை, ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியது. 

பட்டாளி மக்கள் கட்சியினர் இடஒதுக்கீடு வழங்க கோரி போராட்டம் நடத்த முற்பட்டபோது காவல்துறை அதிகாரிகள் அவர்களை தடுத்ததால் பெருங்களத்தூர் அருகே சலசலப்பு ஏற்பட்டது. 

திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மீது பாமகவினர் கல் எரிந்ததால், தாம்பரம்-வண்டலூர் இடையே பத்து நிமிடங்கள் ரயில் நிறுத்தப்பட்டது. 

பாமக கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாமகவின் இளைஞர் அணியினர் பங்கேற்றனர். 

Also Read  ஆதரவு கேட்ட டிடிவி... குலதெய்வ கோவிலில் வழிபட்ட சசிகலா!

600 க்கும் மேற்பட்ட பாமகவினரை வண்டலூர் அருகே, செங்கல்பட்டு போலீசார் தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் சாலை போக்குவரத்தையும் ரயில் போக்குவரத்தையும் தடுத்தனர்.

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மீது எதிர்ப்பாளர்கள் கற்களை வீசினர். ரயிலில் எந்தவிதமான சேதமும், பயணிகளுக்கு  காயங்களும் ஏற்படாமல் இருக்க ரயில் நிறுத்தப்பட்டது. 

Also Read  “மனித மிருகங்கள் சட்டத்தின் சந்துகளில் தப்பிவிடாதபடி விரைந்து தண்டிக்க வேண்டும்” - மு.க.ஸ்டாலின் ட்வீட்

காவல்துறையினர், போராட்டக்காரர்களை ரயில் பாதையில் இருந்து அகற்றிய பின்னர் ரயில் சென்றது.

                                                                      

Also Read  ஆன்லைன் ரம்மிக்கு தடை, ஆளுநர் ஒப்புதல்

இந்த போராட்டத்தால் வண்டலூர் மற்றும் பெருங்களத்தூர் இடையே சாலை போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

கொரோனா தொற்று பாதுகாப்பு நெறிமுறையின் ஒரு பகுதியாக, போலீசார் இப்போராட்டத்திற்கு  அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“ஆன்லைன் வகுப்புகள் ரெக்கார்ட் செய்யப்பட வேண்டும்” – முதலமைச்சர் அதிரடி!

Lekha Shree

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு…!

Lekha Shree

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக ரூ.111.46 கோடி நிதி ஒதுக்கீடு

Tamil Mint

ரேஷன் கடைகளில் இலவச முகக் கவசங்கள் வழங்கும் திட்டம் – முதல்வர் தொடங்கி வைத்தார்

Tamil Mint

உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்ட சீமான்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

கொரோனா 3வது அலையை தடுக்க ரூ.100 கோடி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

sathya suganthi

“சிவ சங்கர் பாபாவை தூக்கில் போடுங்கள்” – பிரபல நடிகை ஆவேசம்!

Lekha Shree

தமிழக முதல்வர் டெல்லி சென்றதற்கும் சசிகலாவிற்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதற்கும் சம்மந்தமில்லை – அமைச்சர் ஜெயக்குமார்

Tamil Mint

மின் கட்டணம்: திமுகவினர் கருப்பு கொடி போராட்டம்

Tamil Mint

உண்மையை மறைக்க சொல்கிறது மத்திய அரசு – மா.சுப்பிரமணியன்

sathya suganthi

அதிமுக Vs திமுக…! – நேருக்கு நேர் களம் காணும் நட்சத்திர வேட்பாளர்கள்

Devaraj

இயக்குனர் வேலு பிரபாகரன் கைது: போலீசார் அதிரடி நடவடிக்கை

Tamil Mint