சுட்டெரிக்கும் சூரியன் – கடும் வெப்பத்தால் 200 பேர் பலி!


அமெரிக்கா மற்றும் கனடாவில் ஏற்பட்டுள்ள கடுமையான வெப்பத்தின் தாக்கத்தால் ஒரேநாளில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பல பகுதிகளில் இதுவரை இல்லாத அளவாக 46 டிகிரி செல்சியஸ் வெப்பம் தாக்குவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

முன்னதாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் பகுதியில் மட்டும் 134 பேர் உயிரிழந்ததாகவும் இந்த மரணங்கள் பருவநிலை தொடர்பானவை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Also Read  டிவியில் நொறுக்கு தீனி விளம்பரங்களுக்கு தடை - எங்கு, எதற்கான தெரியுமா?

கனடாவின் பிரித்தானியா, கொலம்பியா ஆகிய மாகாணங்களிலும் வடமேற்கு பிராந்தியங்களிலும் கடுமையான வெப்பம் நிலவும் என ஏற்கனவே கனடா வானிலை துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் கனடாவில் வரலாறு காணாத வகையில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அங்கு அதிகபட்சமாக 49.5 டிகிரி வெப்பம் பதிவாகி இருக்கிறது.

Also Read  கேன்சரால் பாதிப்படைந்த மூதாட்டியின் விருப்ப உணவை சமைத்துக் கொடுக்க 850 கி.மீ பயணம் செய்த குழு!

கனடாவில் வெப்பநிலை அதிகமாக காணப்பட்ட நிலையில் வழக்கமாக தவித்திருக்கும் துபாய் கூட குளிர்ச்சியான பிரதேசம் என்று கூறும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

இதையடுத்து கொலம்பியா மாகாணத்தில் மட்டும் 70 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியது.

அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததால் வெப்பத்தின் தாக்கத்தைத் தணித்துக் கொள்ளும் பொருட்டு சாலையோரத்தில் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மக்கள் முடிந்தவரை வெளியில் வருவதை தவிர்க்கவும், குளிர்சாதன அறைகளில் இருக்கவும், அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Also Read  கொரோனாவை அடுத்து அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை - 518 பேர் பாதிப்பு!

இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கிரீன் கப்பல் முடக்கம்…!

sathya suganthi

“தமிழ்கூறும் நல்லுலகம்”: சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ் மொழி விழா…!

Lekha Shree

சாவி, போன், பர்ஸ்களை அடிக்கடி தொலைத்து விடுபவரா நீங்கள்…! உங்களுக்கானது இந்த சூப்பர் நியூஸ்…!

Devaraj

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி

Tamil Mint

தொலைந்துபோன தங்க நகரம் – அள்ள அள்ள கிடைக்கும் பொக்கிஷங்கள்…!

Devaraj

93 ஆண்டுகள் பழமையான விளக்கை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ள பெண்!

Shanmugapriya

இனி முகக்கவசம் அணிய தேவையில்லை…! – எங்கு தெரியுமா?

Lekha Shree

தன் காதலியை மணந்தார் இங்கிலாந்து பிரதமர்!

Shanmugapriya

ரூ. 2 கோடி மதிப்பிலான ஆரஞ்சு முத்தை கண்டெடுத்த நபர்! – ஒரே நாளில் கோடீஸ்வரரான அதிர்ஷ்டம்!

Tamil Mint

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – குழந்தை உள்பட 4 பேர் உயிரிழப்பு

Devaraj

அமெரிக்காவின் முதல் பெண் நிதியமைச்சராக தேர்வான 74 வயது ஜேனட் ஏலன்! குவியும் பாராட்டு!

Tamil Mint

இது என்ன புதுசா இருக்கு! – செல்போனில் ஸ்கேன் செய்து கொரோனா தொற்றை கண்டறியும் நவீனம்!

Shanmugapriya