பாக்ஸ் ஆபீசில் மோதவுள்ள 5 நட்சத்திர திரைப்படங்கள்..! களைகட்டும் 2021..!


இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. திரையரங்குகள் செயல்படாததால் சினிமா ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் இருந்தனர்.

பின்னர், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததால் திரையரங்குகள் திறக்கப்பட்டு பல படங்கள் திரையிடுவதற்காக வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றன.

சில படங்கள் நீண்ட இடைவெளிக்கு பின் திரையரங்குகளில் திரையிடப்பட்டு பல கோடி வசூலை குவித்தது.

அதைத்தொடர்ந்து தற்பொழுது பல படங்கள் ஒரே நாளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பழைய நட்சத்திர போட்டி துவங்கவுள்ளதாக தெரிகிறது.

Also Read  ஒப்பனையற்ற அழகு தேவதைகள்…! "கர்ணன்" ஷூட்டிங் ஸ்பார்ட் புகைப்படங்கள்…!

அந்த வரிசையில், டோலிவுட் நடிகர் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ மற்றும் பாலிவுட் நடிகை அலியா பட்டின் ‘கங்குபாய் கதியாவாடி’ ஆகிய இரண்டு படங்கள் ஜூலை 30ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

ராணி முகர்ஜீ மற்றும் சயீப் அலி கான் நடிக்கும் ‘Bunty Aur Babli 2’ மற்றும் கங்கனா ரணாவத்தின் ‘தலைவி’ ஆகிய இரு படங்களும் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்சய் குமாரின் ‘பிருத்விராஜ்’ மற்றும் ஷாஹித் கபூரின் ‘ஜெர்ஸி’ ஆகிய இரு படங்களும் நவம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக இயக்குனர் ராஜமவுலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ‘Roudram Ranam Rudhiram’ (RRR). இந்த படத்தில் நடிகர் சிரஞ்சீவியின் வாரிசு ராம் சரண் மற்றும் ஜூனியர் NTR முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Also Read  "இது மனித நாகரிகத்தின் உச்சம்" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வாழ்த்திய பிரபல இயக்குனர்!

இந்த படமும் அஜய் தேவ்கன் மற்றும் பிரியாமணி இணைந்து நடிக்கும் ‘மைதான்’ படமும் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் மற்றும் திஷா பட்டாணி இணைந்து நடிக்கும் Radhe: Your Most Wanted Bhai திரைப்படம் மற்றும் நடிகர் ஜான் ஆபிரகாமின் சத்யமேவ ஜெயதே 2 படமும் மே 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு படங்களுக்கே குறைவிருக்காது என்று கூறும் அளவிற்கு பல பிடித்தமான நாயகர்களின் படங்கள் ஒன்றுக்கு ஒன்று மோதவுள்ளன. இதனால், பாக்ஸ் ஆபீஸ் தெறிக்க போவது நிச்சயம்!

Also Read  யூடியூப் சேனல் முடக்கம் குறித்து ஹிப்ஹாப் ஆதி பரபரப்பு பதிவு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

’மாமனிதன்’: சீனு ராமசாமி கொடுத்த சூப்பர் அட்டேட்!

Jaya Thilagan

மார்ச் 5-ல் மிரட்ட வரும் ‘மிருகா’! முழு வீச்சில் பிரமோஷன் வேலைகள்!

Bhuvaneshwari Velmurugan

பட வாய்ப்பு இல்லை..அதிக கடன் – சொந்த வீட்டை விற்கும் பிரபல காமெடி நடிகர்..!

HariHara Suthan

“புட்ட பொம்மா” ஜோடிக்கு கொரோனா…! வருத்தத்தில் ரசிகர்கள்…!

Devaraj

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் டிக்கிலோனா.? ரசிகர்கள் ஏமாற்றம்.!

suma lekha

தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு நடிகர் சாந்தனு கொடுத்த நெத்தியடி பதில்..!

HariHara Suthan

ஆர்யா-விஷாலின் எனிமி படத்திற்கு வந்த சோதனை.!

suma lekha

பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்..பிரபலங்கள் இரங்கல்!

suma lekha

திருமணத்திற்கு முன்பே தனது மகனை அறிமுகம் செய்த வரலட்சுமி சரத்குமார்…!

sathya suganthi

2வது முறையாக தாயான கரீனா கபூர்… என்ன குழந்தை தெரியுமா?

Bhuvaneshwari Velmurugan

நடிகை மீரா மிதுன் கைது..! இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்..!

Lekha Shree

PSBB பள்ளி விவகாரத்தின் எதிரொலி – தனது பள்ளிப்பருவ அனுபவங்களை பகிர்ந்த ’96’ பட நடிகை!

Lekha Shree