a

2060-ல் ஆண்களுக்கு இனப்பெருக்க திறன் இருக்காது – ஆய்வில் தகவல்!


ஷன்னா ஸ்வான் என்ற நோயியியல் நிபுணர் எழுதிய ‘கவுண்ட் டவுன்’ என்ற புத்தகத்தில், “அடுத்த ஒரு சில தலைமுறைகளில் ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை கருவுறுதலுக்கு போதுமானதாகக் கருதப்படும் அளவை காட்டிலும் குறைந்து விடக்கூடும்” என்ற அதிரவைக்கும் கூற்றை கூறியுள்ளார்.

2060 ஆம் ஆண்டு முதல் ஆண்களின் இனப்பெருக்கத் திறன் குறைவாகவோ அல்லது முற்றிலும் இல்லாமல் போகக் கூடும் என அவர் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இது மனித குல அழிவுக்கு வித்திடும் அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்கத்திய ஆண்களின் உயிர் எண்ணிக்கை கடந்த 40 ஆண்டுகளில் சுமார் 50 சதவிகிதம் குறைந்து விட்டது என்பதற்கான ஆதாரங்களை அவர் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆண்களிடையே உயிர் அணுக்கள் குறைந்து வருவது கண்டறியப்பட்டிருக்கும் இந்த நிகழ்வு முதல் முறை அல்ல. கடந்த 1990களிலேயே இதுகுறித்து மக்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

Also Read  குடியால் நின்ற திருமணம்… அத்துமீறிய மணமகனுக்கு பாடம் புகட்டிய மணப்பெண்..!

மேலும், 2017ம் ஆண்டு இதுகுறித்து வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டது. அதில், 1973 முதல் 2011 வரை மேற்கத்திய ஆண்களின் உயிர் அணுக்களின் எண்ணிக்கை 50 முதல் 60% வரை குறைந்துவிட்டது.

இந்த சரிவு என்பது ஆண்டுக்கு 1% முதல் 2% வரை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுவே ஷன்னா குறிப்பிடும் கவுண்ட் டவுன் ஆகும்.

ஆண்களின் விந்தணு குறைவு என்பது உடலுறவு கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் விகிதத்தைக் குறைத்துவிடும்.

நம்முடைய வருங்கால தலைமுறையினரிடையே இனப்பெருக்கத் திறன் குறைவாகவோ அல்லது முற்றிலும் இல்லாமல் போகும். 2045 ஆம் ஆண்டு முதல் குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என்றால் உதவி இனப்பெருக்கம் முறைகளை கையாள வேண்டும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு

காரணிகள்:

இனப்பெருக்க குறைபாடு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது நம்மிடையே ஏற்பட்ட வாழ்வியல் மாறுபாடு.

உணவு முறை, உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன், மது குடிப்பது போன்றவை உயிரணுக்கள் குறைபாட்டிற்கு பெரிய காரணிகளாகும்.

ரசாயனங்கள் ஏற்படுத்தும் ஹார்மோன் மாற்றங்கள் மலட்டுத்தன்மையை அதிகரித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நவீன காலத்திய வாழ்க்கை முறையில் வேதிப் பொருட்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலையில் தான் மனிதன் இருக்கிறான் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Also Read  காய்கறிகளை பிளாஸ்டிக் கட்டிங் போர்டு கொண்டு நறுக்குபவர்கள் கவனத்திற்கு… இதை படியுங்கள் முதலில்!

கர்ப்ப காலத்தில் தாயின் மூலம் வேதிப்பொருட்கள் குழந்தைக்கு செல்வதால் பிறக்கும் முன்னரே இந்த சூழலை கருவில் இருக்கும் குழந்தை சந்தித்து விடுகிறது.

மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ரசாயனம், சக உலகில் வாழும் மிருகங்களையும் இனப்பெருக்க குறைபாட்டினை சந்திக்க வைத்துள்ளது.

இந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள தகவல் படி நடக்குமா? நடக்காதா? மனித குலம் அழிந்து விடுமா? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறுவது கடினம்.

இருப்பினும் இந்த நிலைக்கு காரணமாக கூறப்படும் நம் அன்றாட வாழ்க்கை முறையை மாற்றி இனப்பெருக்கத் திறனை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கலாம்.

மேலும், இந்த உலகில் நம்முடன் இணைந்து வாழும் பிற உயிர்களையும் காப்பாற்ற வேதிப்பொருள் பிரச்சினையை சரியாக கையாளுவதும் அவசியம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரூ.13,500 கோடி வங்கி மோசடி – வெளிநாட்டு போலீசிடம் சிக்கிய வைர வியாபாரி மெகில் சோக்சி…!

sathya suganthi

குஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக அபார வெற்றி – ட்வீட் செய்த மோடி

Devaraj

தமிழகத்தின் அம்மா உணவகத்தைப் போல மேற்கு வங்கத்திலும் குறைவான விலை உணவகங்கள்!

Tamil Mint

லீக்கான அர்னாப்பின் வாட்ஸ்-அப் உரையாடல்… சிக்கலில் அர்னாப்… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

Tamil Mint

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்! பயத்தில் சாலைகளில் தஞ்சம் புகுந்த மக்கள்!

Tamil Mint

டெல்லி விவசாயிகள் போராட்டம்: நட்சத்திரங்களின் ட்விட்டர் மோதல்! ரிஹானா முதல் சித்தார்த் வரை நடந்தது என்ன?

Tamil Mint

“விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருக்கும்” – பிரியங்கா காந்தி

Shanmugapriya

கொரோனாவை பரப்பும் கரன்சி (ரூபாய்) நோட்டுக்கள்-ஆர்.பி.ஐ அதிர்ச்சி தகவல்…

Tamil Mint

ஜூன் மாதம் 28ம் தேதி தொடங்குகிறது அமர்நாத் புனித யாத்திரை…!

Devaraj

மாட்டு சாணம் சிகிச்சை.. இந்த கொடிய தொற்று ஏற்படலாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

Ramya Tamil

லடாக்கில் ராஜ்நாத் சிங்: சீனாவுக்கு எச்சரிக்கை

Tamil Mint

மூட நம்பிக்கையால் முடிவுக்கு வந்த வாழ்க்கை…

Tamil Mint