புல்லி பாய் செயலியை உருவாக்கிய நீரஜ் பிஷ்னோய் என்ற இளைஞர் கைது…!


புல்லி பாய் செயலியை உருவாக்கிய நீரஜ் பிஷ்னோய் என்ற 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த செயலில் இஸ்லாமிய பெண்களின் புகைப்படத்தை தவறாக பதிவிட்ட விவகாரத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடஇந்தியாவில் இஸ்லாமிய பெண்களை இழிபடுத்துவதற்காக பயன்படுத்தப்படும் வார்த்தை பிரயோகம் தான் Sulli. இதை அடிப்படையாக வைத்து Sulli Deals என்ற செயலி உருவாக்கப்பட்டது.

இந்த Sulli Deals செயலி முடக்கப்பட்ட நிலையில், Bulli Bai என்ற செயலி உருவாக்கப்பட்டு சர்ச்சையானது.

இந்த செயலியில் இஸ்லாமிய பெண்களின் புகைப்படம் பதிவேற்றப்படும். யூசர் ஒருவர் இதை லாக்இன் செய்கிறார் என்றால், அவருக்கு ஒரு இஸ்லாமிய பெண்ணின் புகைப்படம் திரையில் தோன்றும். இவர்தான் உங்களின் சுல்லி.. இவரை ஏலம் விடுங்கள் என்று கூறும்.

Also Read  கோவை: தடையின்றி நடக்கும் கஞ்சா விற்பனையால் விபரீதம்..!

அந்த பெண்ணை அதே ஆப்பில் இருக்கும் மற்ற யூசர்களுக்கு இவர் ஏலம் விட வேண்டும். கேட்கவே அதிர்ச்சியாக இருக்கும் இப்படி ஒரு செயலிதான் முதலில் Sulli Deals என்ற பெயரிலும், இப்போது Bulli Bai என்ற பெயரிலும் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் டெல்லியிலும், உத்தர பிரதேசத்திலும் Bulli Bai செயலி தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டது.
டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் பத்திரிகையாளர் (முஸ்லிம்) தன்னுடைய புகைப்படத்தை மாற்றம் செய்து தவறான முறையில் செயலியில் பதிவிட்டுள்ளதாகக் கூறி உரிய ஆதாரங்களுடன் டெல்லி காவல்துறையில் புகார் செய்தார். புகாரின் நகலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

Also Read  4 ஆண்டுகளுக்கு முன் பக்கவாதத்தால் முடங்கிய நபர்… கொரோனா தடுப்பூசி போட்ட பின் நிகழ்ந்த அதிசயம்..!

இதற்கு ட்விட்டரில் பதில் அளித்த டெல்லி காவல்துறை, இந்த விவகாரம் குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தது.

இதையடுத்து இந்த வழக்கை மும்பை போலீஸ் ஒரு பக்கம் தீவிரமாக விசாரித்து வந்தது. மும்பை போலீஸ் சார்பாக அந்த Bulli Bai செயலியின் ட்விட்டர் பக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் அதன் ஐபி அட்ரஸ் கண்டுபிடிப்பட்டது.

இந்த ஐபி அட்ரஸ் பெங்களூரை சேர்ந்தது. இதையடுத்து உடனடியாக பெங்களூர் சென்ற போலீசார் இந்த ஆப்பை நடத்தி வந்த நபர்களில் ஒருவரை கைது செய்தனர். அந்த நபர் 21 வயதே ஆன கல்லூரி மாணவர். இவர் பெங்களூரில் சிவில் என்ஜினியரிங் படித்து வந்துள்ளார்.

இவரும் ஆப்பை நடத்தியவர்களில் ஒருவர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவரின் பெயர் வெளியிடப்படவில்லை. இவரின் பெயரை வெளியிட்டால் அது சிக்கலாகிவிடும். விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என்று மும்பை போலீசார் தெரிவித்தனர்.

Also Read  தினமும் கோமியம் குடிக்கிறேன் - பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் சர்ச்சை பேச்சு

ஆனால் இவர் மட்டும் தனி ஆளாக இருந்து இந்த செயலியை நடத்தவில்லை. இவர் பின் வேறு கும்பல் இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், புல்லி பாய் செயலியை உருவாக்கிய நீரஜ் பிஷ்னோய் என்ற 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த செயலில் இஸ்லாமிய பெண்களின் புகைப்படத்தை தவறாக பதிவிட்ட விவகாரத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விமானம் தரையிறங்குவதில் ஏற்பட்ட சிக்கல்… நடிகை ரோஜா வெளியிட்ட வீடியோ வைரல்..!

Lekha Shree

28 மனைவிகள்! 135 குழந்தைகள்! 126 பேரக்குழந்தைகள்! 37வது திருமணம் செய்த தாத்தா!

sathya suganthi

தாய்க்கு தொற்று இல்லை… பிறந்த குழந்தைக்கு தொற்று உறுதி! குழப்பத்தில் மருத்துவர்கள்!

Lekha Shree

வேகமாக பரவும் கொரோனா – கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவிப்பு!

Lekha Shree

கருப்பு கயிறு காலில் கட்டிக்கொள்வது ஏன் தெரியுமா..?

mani maran

தேசிய தண்ணீர் விருதுகள் 2020-க்கான விண்ணப்பங்களை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வரவேற்றுள்ளது.

Tamil Mint

வீட்டில் கழிப்பறை இல்லையா? வேட்பு மனு நிராகரிப்பு – குஜாரத்தில் அசத்தல் நடவடிக்கை

Tamil Mint

முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உடல்நிலை கவலைக்கிடம்?

Lekha Shree

12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை..!

Lekha Shree

மனைவி, 3 குழந்தைகள் கொலை… அமெரிக்காவில் ஆயுள் தண்டனை பெற்ற இந்தியர்…

Lekha Shree

டிஎன்பிஎஸ்சி மற்றும் ஜேஇஇ தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியீடு

Tamil Mint

காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல்…! வெளியே குதித்து தப்பிப்போரை தடுக்க முடியாது…! – சொன்னது யார் தெரியுமா?

sathya suganthi