a

தமிழகத்தில் 236 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு!


கொரோனாவை அடுத்து மக்களை ஆட்டிப்படைக்கும் நோயாக இந்த கருப்பு பூஞ்சை நோய் உருவெடுத்துள்ளது. இந்தியாவில் தற்போது கருப்பு பூஞ்சை நோயால் 11,717 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், குஜராத் மாநிலத்தில் அதிகபட்சமாக 2,859 பேரும் மகாராஷ்டிராவில் 2,770 பேரும் தமிழகத்தில் 236 பேரும் இந்த கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Also Read  தென்தமிழக மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவில் இருந்து மீண்டுவந்த பலபேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

தற்போது இந்த கருப்பு பூஞ்சை நோய் தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. கொரோனா 2ம் அலையின் பாதிப்பில் இருந்தே மீளாத மக்கள் இந்த புதிய தொற்றால் மிகுந்த கலக்கமடைந்துள்ளனர்.

இந்த பூஞ்சையானது வீட்டில் காற்றுப்புகாத பகுதிகளில், அழுகிய காய்கறிகளில், பழங்களில் காணப்படும். நாம் சுவாசிக்கும்போது அது சுவாச திசுக்களை பாதிக்கும்.

பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கும் அபாயம் அதிகம்.

Also Read  தமிழக அரசு மீது ராமதாஸ் கடும் தாக்கு

ஸ்டீராய்டு மருந்துகளை அதிக அளவில் எடுத்துக் கொள்பவர்களுக்கும், மூச்சுத் திணறல், நுரையீரல் பாதிப்பு, ஆர்த்தரைடீஸ் நோய் பாதிப்பு, சிறுநீரகம் போன்ற மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை எளிதில் தாக்கும்.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு மூச்சுத் திணறல் அதிகமாக இருக்கும்.

Also Read  வெப்பத்தில் இருந்து தப்பிக்க இந்தியாவின் சிறந்த சுற்றுலா தலங்கள்…!

அதை குறைக்க ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்துவதால் கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி நடிகை சாந்தினி மீது பரபரப்பு புகார்…!

Lekha Shree

நடிகர் ரஜினி, ராகவேந்திர மண்டபத்தில் மீண்டும் அரசியல் கலந்துரையாடல்

Tamil Mint

இன்று காலை உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை: சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

அமேசான் தனித் திரையரங்குகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு குடோன்களாக மாற்றப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்: திருப்பூர் சுப்பிரமணியம்

Tamil Mint

ஸ்டாலின் எப்போது முதல்வராக பதவியேற்கிறார்..? நாளை முக்கிய ஆலோசனை..

Ramya Tamil

மூக்குத்தி அம்மன் திரைப்பட விமர்சனம்

Tamil Mint

சென்னையை சீரமைக்க வருகிறது முதலமைச்சர் ஸ்டாலினின் ‘ப்ராஜெக்ட் ப்ளூ’ திட்டம்…!

Lekha Shree

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

Tamil Mint

மே 1 முழு ஊரடங்கு தேவையில்லை – தமிழக அரசு

Devaraj

கட்சியில் இருந்து கொண்டு சசிகலாவுக்கு ஆதரவாக பேசக்கூடாது – கோகுல இந்திர குறித்து பேசியுள்ள ஜெயக்குமார்!

Tamil Mint

தமிழகம்: முழு ஊரடங்கின் போது மதுபானக் கடைகள் இயங்க தடை!

Lekha Shree

தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம்பெறும் தொகுதிகள் அறிவிப்பு

Tamil Mint