கர்நாடகாவில் கொரோனாவுக்கு 3.27 லட்சம் பேர் பலியா? பகீர் குற்றம் சாட்டும் காங்கிரஸ்!


கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, “சாம்ராஜ்நகரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 36 பேர் உயிரிழந்தனர். ஆனால் 24 பேரின் குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 12 பேரின் குடும்பங்களுக்கு அரசு இன்னும் நிவாரணம் வழங்கவில்லை. ஆக்சிஜன் பற்றாக்குறையால் தான் சாம்ராஜ்நகரில் கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

நான் சாம்ராஜ்நகருக்கு சென்று இறந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். 36 பேர் துடிதுடித்து இறந்துள்ளனர்.

Also Read  ப.சிதம்பரம் மருமகளின் புகைப்படத்தை பயன்படுத்திய பாஜக!

உயிரிழந்த 36 பேரில் சுமார் 30 பேர் 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். ஒருவருக்கு திருமணமாகி 3 மாதங்கள் தான் ஆகிறது.

மற்றொருவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்தவர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.

Also Read  பிரணாப் முகர்ஜி உடல் இன்று தகனம், பிரதமர் நேரில் அஞ்சலி

கொரோனா வைரஸ் தொற்றால் இறந்த அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

அரசின் இணையதள பக்கத்தில் உள்ள தகவலின்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 3 லட்சத்து 27 ஆயிரத்து 985 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால் மாநில அரசின் சுகாதாரத்துறை இதுவரை 30,000 பேர் தான் இறந்துள்ளனர் என்று சொல்கிறது. அரசு உண்மை தகவல்களை மூடிமறைக்கிறது” என்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வதந்திகளுக்கு மக்கள் இரையாக வேண்டாம்…! நாட்டையே கொரோனா உலுக்கி விட்டது – மோடி உருக்கம்

Devaraj

ஜியோவை முந்திய ஏர்டெல்

Tamil Mint

காதல் மனைவிக்கு அரசு மருத்துவமனையிலேயே வளைகாப்பு நடத்திய கணவர்!

Shanmugapriya

அதிக மின்னல் வெட்டு தாக்குதல் நடந்த மாநிலங்கள்… முதலிடத்தில் தமிழகம்..!

Lekha Shree

பண்டிகை காலமான நவம்பர் மாதத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறையில் வளர்ச்சி

Tamil Mint

பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தீவிரம்!

Tamil Mint

கொரோனா நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவமனை ஊழியர் கைது!

Lekha Shree

“மேற்குவங்கத்தில் அடுத்து பாஜக ஆட்சிதான் அமையும்” – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Tamil Mint

சென்னை டு பாரிஸ் – நேரடி விமான சேவை தொடக்கம்..!

Lekha Shree

மரிக்காத மனித நேயம்; கொரோனா சிகிச்சை மையங்களாக மாறும் மசூதிகள்!

Shanmugapriya

“பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசு மீது பழி போட்டால் போட்டுக்கொள்ளுங்கள்” – நிர்மலா சீதாராமன்

Shanmugapriya

மருத்துவ உதவி கிடைக்காததால் உயிரிழந்த ‘கோ’ பட நடிகையின் சகோதரர்!

Lekha Shree