தூத்துக்குடி உள்பட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…!


தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் முதல் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, புதுக்கோட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ததால் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது.

Also Read  மேகதாது அணை விவகாரம் - பிரேமலதா விஜயகாந்த், விஜயபிரபாகரன் மீது வழக்குப்பதிவு..!

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையால் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக திருச்செந்தூர் கோயிலில் மழைநீர் புகுந்தது. இதனால் பிரகாரம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது.

தூத்துக்குடியில் 25 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also Read  குலசேகரபட்டினம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது தசரா திருவிழா..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்து கடவுள்களை வைத்து பிரச்சாரம்…! – கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு…!

Devaraj

எங்க கோட்டை மெட்ராஸூ…! அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மாஸ் காட்டிய திமுக!

sathya suganthi

அமலானது அதிகாரபூர்மற்ற லாக்டவுன்: தவிக்கும் தமிழகம்

Tamil Mint

‘சியான் 60’ படத்தின் டைட்டில் அறிவிப்பு..! செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

mani maran

ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை தரப்பட வேண்டும்: மதுரை உயர்நீதிமன்றம்

Tamil Mint

வரும் 9ந் தேதி சென்னையில் திமுக பொதுக்குழு கூடுகிறது

Tamil Mint

திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

Jaya Thilagan

காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் மாற்றம்…!

sathya suganthi

தமிழகம்: 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!

Lekha Shree

தமிழகத்தில் அடுத்த ஆட்சி யாருடையது?… டைம்ஸ் நவ்-சி வோட்டர் கருத்துக்கணிப்பு…!

Devaraj

அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணனுக்கு கொரோனா

Tamil Mint

‘ஜெய்பீம்’ திரைப்பட சர்ச்சை – நடிகர் சூர்யா வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

Lekha Shree