a

வாட்ஸ் அப்பின் 3 புதிய அப்டேட்ஸ்… என்னென்ன தெரியுமா?


வாட்ஸ்அப் செயலியின் மூன்று புதிய அப்டேட்கள் தற்போது வெளியாகியுள்ளது. உலகின் முன்னணி சாட் பாக்ஸ் செயலியாக உள்ள வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்ப புதிய அப்டேட்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் விரைவில் 3 புதிய அப்டேட்கள் வாட்ஸ் அப்பில் மேற்கொள்ளப்பட உள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.

மல்டி டிவைஸ் சப்போர்ட், வியூ ஒன்ஸ் மற்றும் disappearing messagesஆகியவைதான் அந்த மூன்று புதிய அப்டேட்கள்.

மல்டி டிவைஸ் ஆப்ஷனை பல ஆண்டுகளாக வாட்ஸ்அப் நிறுவனத்திடம் யூசர்கள் கேட்டு வருகின்றனர். ஸ்மார்ட்போனில் இருக்கும் வாட்ஸ்அப்-ன் முதன்மை செயலியை பயன்படுத்தாமல் கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லெட் ஆகியவற்றில் வாட்ஸ்அப்-ஐ ஓபன் செய்யலாம்.

தற்போது லேப்டாப் அல்லது டேப்லெட்-ல் ஓபன் செய்ய வேண்டும் என்றால் whatsappweb கனெக்டிவிட்டி மூலம் ஸ்மார்ட்போனில் இருக்கும் வாட்ஸ்ஆப் செயலி இணைக்கப்படுகிறது. இதனை மாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்திருந்த நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் அதை மேம்படுத்தி வருகிறது.

Also Read  இன்டர்நெட் சேவையை மேம்படுத்த கடலுக்கடியில் கேபிள் பதிக்க பேஸ்புக் நிறுவனம் திட்டம்!

disappearing messages என்ற வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த ஆப்ஷனை ஆன் செய்து வைக்கும் பட்சத்தில் குரூப் அல்லது தனிநபர் அனுப்பும் மெசேஜ் மற்றும் மீடியா பைல்களை 7 நாட்களில் அழித்துவிடும்.

தனிநபர் மற்றும் குரூப் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக அந்த ஆப்ஷனை ஆன் செய்து வைத்திருந்தால் மட்டுமே மெசேஜ் மற்றும் மீடியா பைல்கள் அழியும் நிலையில் தற்போது அந்த அம்சத்தில் சில மாற்றங்களை கொடுத்து அதை மேம்படுத்தி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Also Read  சர்வதேச இணையதளங்கள் திடீர் முடக்கம்… காரணம் இதுதான்..!

அடுத்தபடியாக வியூ ஒன்ஸ் ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தனிநபர் மற்றும் குரூப்களில் வரும் மெசேஜ் மற்றும் வீடியோ பைல்களை ஒரு முறை பார்த்த பிறகு அவை அழிந்து விடும். ஸ்நாப் சாட்டில் இருக்கும் இந்த அம்சத்தை அடிப்படையாக வைத்து வாட்ஸ் அப்பிலும் வியூ ஒன்ஸ் அம்சம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த மூன்று அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டால் வாட்ஸ்அப் யூசர்களுக்கு வித்தியாசமான மற்றும் புதுமையான அனுபவம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

Also Read  6 ஜி வயர்லெஸ் தொழில் நுட்பம் - ஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டுவிட்டருக்கு தடை : ‘கூ’ இந்திய செயலிக்கு கூடும் மவுசு…!

sathya suganthi

சாவி, போன், பர்ஸ்களை அடிக்கடி தொலைத்து விடுபவரா நீங்கள்…! உங்களுக்கானது இந்த சூப்பர் நியூஸ்…!

Devaraj

வாட்ஸ்அப் பயன்படுத்த இனிமேல் இன்டர்நெட் தேவையில்லை….

VIGNESH PERUMAL

இந்தியாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடையா?

Lekha Shree

ஆன்லைன் கேம் ‘Free Fire’க்கு தடை விதிக்கப்படுமா?

Lekha Shree

பேஸ்புக்கின் ‘ரீட் பர்ஸ்ட்’ வசதி சோதனை முறையில் இன்று அறிமுகம்!

Lekha Shree

திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கையை பயனர்கள் ஏற்க வாட்ஸ் அப் தந்திரம்?

Lekha Shree

அதிரடி ஆஃபர்களுடன் களமிறங்கியுள்ள சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள்!!!

Lekha Shree

Truecaller செயலியில் இனி கோவிட் மருத்துவமனைகளை தேடலாம்..? எப்படி தெரியுமா..?

Ramya Tamil

2 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் கால்.. அதுவும் வெறும் 75 ரூபாயில்.. ஜியோவின் மலிவான ரீசார்ஜ் திட்டம்..

Ramya Tamil

மீண்டும் களமிறங்கும் பிரபல நிறுவனம்…. அதிக எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்…

VIGNESH PERUMAL

வாட்ஸ் அப்-ல் வரும் லிங்க்…. அழுத்தினால் பணம் திருடு போகும் அபாயம்..! முழு விவரம் இதோ!

Lekha Shree