தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 300 பேர் கொலை.! Top List-ல் தூத்துக்குடி, மதுரை.!


2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 300 பேர் கொலை செய்யப்பட்டுள்ள தகவல் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தலித் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக செயல்படும் ஒரு அமைப்பை சேர்ந்தவர் கதிர். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் சாதி ரீதியிலான குற்றங்கள் குறித்து ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவிற்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தரப்பட்டுள்ள தகவல்கள் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி கொடுக்கப்பட்ட இந்த தகவல்களில் 2016 முதல் 2020ம் ஆண்டு கால கட்டத்திற்கு இடையில் சுமார் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 300 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதில் 229 கொலை வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது. மீதமுள்ள வழக்குகளில் 28 வழக்குகள் போலீஸ் விசாரணையில் உள்ளது. வெறும் 13 வழக்குகள் மட்டுமே தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் 30 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 29 கொலைகள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மதுரை மாவட்டத்தில் 28 கொலைகள் நடந்துள்ளது. இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற 28 கொலைகளில் 9 கொலைகள் மதுரை சிட்டி பகுதியில் அரங்கேறியுள்ளது.

தமிழகத்தில் உள்ள மொத்தம் 38 மாவட்டங்களில் 33 மாவட்டங்களில் இருந்து மட்டுமே இந்த தகவல் தரப்பட்டுள்ளது. சென்னை, அரியலூர், கன்னியாகுமரி, திருப்பூர், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் இருந்து தரவுகள் அளிக்கப்படவில்லை. இதில் கொடுமை என்னவென்றால் மீதமுள்ள அந்த ஐந்து மாவட்டங்களில் இருந்தும் விவரங்கள் பெறப்பட்டால் 300-ஆக உள்ள எண்ணிக்கை 340 முதல் 350 உயர வாய்ப்புள்ளது.

Also Read  வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: பலத்த மழை எச்சரிக்கை

பட்டியலின சமூகத்தில் யாரேனும் ஒருவர் கொலை செய்யப்பட்டால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட அடுத்த இரண்டு மாதங்களுக்குள் கண்டிப்பாக தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழே கூறப்பட்டுள்ள நிலையில் இந்த மாதிரியான வழக்குகள் தமிழகத்தில் 86 சதவீதம் நிலுவையில் உள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கதிர்., “இந்த மாதிரியான கொலை வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட வாய்ப்பு நேரும் பட்சத்தில் அரசு சரியான நேரத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதில்லை. மேலும் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரிகளின் செயல் திறன் மிகவும் மந்தமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டவுடன் குற்றம் சாட்ட அவர்களை கைது செய்யும் போதும் சரி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பணம் இழப்பீடு வழங்குவது சரி மிக மிகத் தாமதமாகவே நடைபெறுகிறது. அவ்வளவு ஏன் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டத்தில் குற்றம் நடைபெறும் இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் நேரடியாக வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என விதி உள்ளது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் அது நடப்பதே இல்லை” என ஆதங்கத்துடன் குற்றம் சாட்டினார்.

Also Read  பெரியார் சிலை மீது காவிச் சாயம் வீச்சு: கோவையில் பரபரப்பு

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. மேலும் அவர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தை தடுக்கவும் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் வெளியாகியுள்ள இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இணையத்தில் வைரலாகும் #GoBackStalin – காரணம் இதுதான்…!

sathya suganthi

அதிமுகவில் சலசலப்பு! – சினேகம் பாராட்டும் முன்னாள் அமைச்சர் காமராஜ், திவாகரன்..!

Lekha Shree

தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

suma lekha

ஆன்லைன் வகுப்பால் அரிய வகை மன நோய் : மாணவியின் வயிற்றில் 1 கிலோ தலைமுடி அகற்றம்

sathya suganthi

பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி

Jaya Thilagan

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி

Tamil Mint

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

Tamil Mint

மத்திய அரசுக்கு ரூ 31.50; தமிழகத்துக்கு வெறும் ரூ.1.40 – உண்மையை போட்டுடைத்த பிடிஆர்…!

sathya suganthi

கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிடும் சென்னை மக்கள்: அதிகரிக்க போகிறதா கொரோனா பாதிப்பு?

Tamil Mint

துரைமுருகனுக்கு கொரோனா தொற்று – மகன் கதிர் ஆனந்த் மறுப்பு!

Lekha Shree

மதியால் கோவிட்டை வெல்வோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

sathya suganthi

தமாகா மூத்தத் தலைவருக்கு கொரோனா தொற்று

Tamil Mint