a

3 ஆயிரம் மருத்துவர்கள் ராஜினாமா – காரணம் இது தான்…!


மத்திய பிரதேசத்தில் 6 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் இளநிலை மருத்துவர்கள், அரசிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதால் தங்களுக்கோ, தங்களது குடும்பத்தினருக்கோ வைரஸ் தொற்று ஏற்பட்டால் இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் இளநிலை மருத்துவர்கள் வலியுறுத்தினர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக கடந்த மே 6 ஆம் தேதி மாநில அரசு உறுதி அளித்ததாகவும், ஆனால், அந்த உறுதி மொழியை காப்பாற்றவில்லை என்றும் குற்றம்சாட்டி கடந்த 31 ஆம் தேதி முதல் இளநிலை மருத் துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பான வழக்கை மாநில உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் விசாரித்தது.

Also Read  புகைபிடிப்பவர்களை கொரோனா தாக்கும் வாய்ப்பு குறைவு! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இளநிலை மருத்துவர்களின் வேலைநிறுத்தம் சட்டவிரோதம் என்றும் அவர்கள் 24 மணி நேரத்தில் பணிக்குத் திரும்ப வேண்டும் இல்லையெனில் அவர் கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.
மேலும் இள நிலை மருத்துவர்கள் சங்கத் துடன் பேச்சுவார்த்தை நடத்த உயர்நிலைக் குழுவை நியமிக்கவும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதனிடையே, வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னின்று நடத் திய 468 இளநிலை மருத்துவர்களின் பணி நியமனத்தை ஜபல்பூர் மருத்துவ பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் ரத்து செய்தது.

Also Read  கொரோனா அச்சுறுத்தல் : அமர்நாத் யாத்திரை ரத்து

பணி நியமனம் ரத்து செய்யட்டவர்கள் அனைவரும் இறுதியாண்டு மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் என்பதால், கடைசி ஆண்டு தேர்வை அவர்களால் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசின் நடவடிக்கையால் கடும் அதிருப்தி அடைந்த இளநிலை மருத்துவர்கள், தங்களது பணியை ராஜினாமா செய்து வருகின்றனர்.

Also Read  பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வுச் சுமையை குறைக்கும் தெலங்கானா அரசு!

இதுவரை சுமார் 3 ஆயிரம் இள நிலை மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தங்களது பிரச் சினை தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளோம் என்றும் இளநிலை மருத் துவர்கள் சங்கத்தின் தலைவர் அரவிந்த் மீனா தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இணைய வழி வங்கிச் சேவை நாளை தடை

Tamil Mint

சிங்கத்துக்கே கொரோனா : செல்லப்பிராணிகளிடம் இருந்து தள்ளி இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

sathya suganthi

310 கி.மீ நீள நீர்வழித்தடத்தில் சூரியசக்தி படகில் பயணம் செய்த முதல்வர்!

Tamil Mint

150 கிலோமீட்டர் தொலைவில் இருந்து தெளிவாக தெரியும் இமயமலை! – வைரலாகும் புகைப்படங்கள்

Shanmugapriya

பிரணாப் முகர்ஜி கண்டிஷன் வெரி சீரியஸ்

Tamil Mint

மனைவியை கடித்த நாயை கொன்ற கணவர்!

Shanmugapriya

கொரோனா தடுப்பு கவசத்தை அணிந்து ரூ.13 கோடி மதிப்பிலான தங்க நகைகளை திருடிய நபர்! – வீடியோ

Tamil Mint

இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்

Tamil Mint

இனி 6 மணி நேரம் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி.. அமலுக்கு வரும் பகுதி நேர ஊரடங்கு..

Ramya Tamil

“கோழிக்கு வயிற்றுப்போக்கு” – இவ்விடங்களில் வெளியே வந்த கர்நாடக நபர் சொன்ன காரணம்

Shanmugapriya

நடப்பாண்டின் முதல் சூரிய கிரகணம் – சிறப்பு என்ன தெரியுமா?

sathya suganthi

கொரோனா 2வது அலை எதிரொலி – மீண்டும் அமலுக்கு வந்த இரவு நேர ஊரடங்கு!

Lekha Shree