கூகுள் மீது வழக்கு தொடுத்த 36 அமெரிக்க மாகாணங்கள்… முழு விவரம் இதோ..!


கூகுள் நிறுவனம் டிஜிட்டல் தளத்தில் ஆதிக்கம் செலுத்தி, ஆரோக்கியமான போட்டி சந்தையை சட்டவிரோதமாக நசுக்க நினைப்பதாக கூறி 36 அமெரிக்க மாகாணங்கள் வழக்கு தொடுத்துள்ளன.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகமே இன்று டிஜிட்டல் மயத்திற்கு மாறி வருகிறது.

இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்துமே தங்கள் செல்போனில் கிடைக்கும் விதமான ஆப்கள் புதிது புதிதாக உருவாக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு உருவாக்கப்படும் ஆப்களை, கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் அதை உருவாக்கியவர்கள் விற்பனை செய்வார்கள்.

இந்த ஆப்களை ஆண்ட்ராயிட் உபயோகிக்கும் மக்கள் டவுன்லோட் செய்து தங்கள் செல்போனில் இன்ஸ்டால் செய்ய கட்டணம் செலுத்த வேண்டும்.

Also Read  இது என்ன புதுசா இருக்கு! - செல்போனில் ஸ்கேன் செய்து கொரோனா தொற்றை கண்டறியும் நவீனம்!

அப்படியாக நடக்கும் ஒவ்வொரு பரிவத்தனைகளுக்கு இடைத்தரகராக கூகுள் நிறுவனம் செயல்பட்டு 30% கமிஷனாக வசூலிக்கும்.

இது சந்தையில் வசூலிக்கப்படுவதை விட பல மடங்கு அதிகம்.

கூகுள் நிறுவனம் போட்டி சந்தைக்கு இடம் கொடுப்பதில்லை எனவும் போட்டி நிறுவனங்கள் செயல்பட கூகுள் நிறுவனம் இடையூறு செய்வதால் சந்தை மதிப்பு கணிசமான குறைவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் புதிய முயற்சிகளும் இதனால் கைவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  கரடி சாலையை கடப்பதற்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து…!

இதுநாள் வரையிலும், இன்டர்நெட்டை கையில் வைத்திருந்த கூகுள் நிறுவனம், தற்போது டிஜிட்டலிலும் ஆதிக்கம் செலுத்துகிறது.

இதனால், ஆண்ட்ராய்டு சாதன பயனாளர்கள் வலுவான போட்டியை இழந்து விட்டனர் என கூறி இதுதொடர்பாக ஏற்கனவே கூகுள் மீது அமெரிக்காவில் கண்டனங்கள் எழுப்பப்பட்டது.

மேலும், இந்த தொழில் ஆதிக்கத்தை தடுப்பதற்காக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை மீறி தற்போது கூகுள் நிறுவனம் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Also Read  கொரோனா வைரஸ் - உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகள்…!

எனவே, கூகுளின் சட்ட விரோத ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவும், லட்சக்கணக்கான நுகர்வோர் மற்றும் வணிக உரிமையாளர்களை பாதுகாக்கவும் 36 அமெரிக்க மாகாண அரசுகளும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும், வாஷிங்டன் சார்பிலும் நியூயார்க் அட்டர்னி ஜெனரல் ஜேம்ஸ் மற்றும் உட்டா, வட கரோலினா மற்றும் டென்னசியின் அட்டர்னி ஜெனரல் ஆகியோரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

இது, இணையம் மற்றும் டிஜிட்டல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜோ பைடன் பதவியேற்பு விழாவின் ‘நாயகன்’ பெர்னார்ட் சாண்டர்ஸ்..! நெட்டிசன்களை கவர்ந்த புகைப்படம்!

Tamil Mint

ரொனால்டோவின் ஒரே ஒரு சம்பவம்…! கோக் நிறுவன பங்கு வீழ்ச்சி…! எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா?

sathya suganthi

அசுரவேகத்தில் வந்த ரயில் – விபத்தில் 32 பேர் உயிரிழப்பு!

Lekha Shree

ரெம்டெசிவிர் மருந்தை கொரோனா மருந்து பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கிய WHO!

Lekha Shree

கியூபா தலைவர் பதவியிலிருந்து விலகும் காஸ்ட்ரோ குடும்பம்…!

Devaraj

“எங்கள் காதலின் வயது 20” – 20ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடும் ஓரினச் சேர்க்கை தம்பதிகள்…!

Lekha Shree

உலகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள்

Tamil Mint

ஓலா மின்சார இருசக்கர வாகனத்தின் விற்பனைக்கான முன்பதிவு தொடக்கம்…! என்ன விலை தெரியுமா?

Lekha Shree

உலகின் மிக விலை உயர்ந்த ’தங்க’ பிரியாணி! விலை எவ்வளவு தெரியுமா?

Jaya Thilagan

காசா முனையில் இருந்து ராக்கெட் தாக்குதல் – இஸ்ரேலின் பதிலடியில் 20 பேர் பலி…!

sathya suganthi

கணவன்-மனைவி வாழ்க்கை முறையில் வெறுப்பு – ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு பெருகும் ஆதரவு…!

sathya suganthi

சிவனின் கையில் மதுபானம்… சர்ச்சையை கிளப்பிய இன்ஸ்டாகிராம்..!

Lekha Shree