a

கோலிவுட் கொண்டாட்டம் – இன்றைக்கு பிறந்தநாள் காணும் பிரபலங்கள்…!


மே 25ம் தேதியான இன்று கோலிவுட்டின் 4 பிரபலங்கள் தங்களின் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். அவர்கள், நடிகர் கவுண்டமணி, நடைகர் கார்த்தி, நடிகை ஸ்ரீதிவ்யா, நடிகை சிவாங்கி.

காமெடியில் டைமிங் கவுன்டர்களை அள்ளி தெறிக்கவிட்டவர் காமெடி ஜாம்பவான் கவுண்டமணி. இவரது பாடி லேங்குவேஜ் மற்றும் முகபாவனைகள் என அனைத்தும் பார்ப்பவர்களை கலகலப்பூட்டும். அதேபோல அரசியல் சார்ந்த கருத்துக்களை தன்பாணியில் கூறுவதில் வல்லவர் இவர்.

Also Read  நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள் இன்று… கொண்டாடும் ரசிகர்கள்!

பருத்திவீரன் படத்தின் வாயிலாக கதாநாயகனாக அறிமுகமாகி சினிமா பின்புலம் இருந்தபோதும் தனது உழைப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் கார்த்தி. ஹீரோக்களில் காமெடியை திரையில் வெளிகாட்டுபவர்கள் வெகு சிலரே. அந்த ஒரு சில ஹீரோக்களில் ஒருவர் தான் கார்த்தி.

தனது ஹோமலி லுக் மற்றும் கியூட் எக்ஸ்பிரஷன்ஸால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. தெலுங்கை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்நாட்டு பெண் போன்ற பிம்பத்தை ஏற்படுத்தியவர். இவரது படங்களை பார்ப்பவர்களுக்கு பக்கத்துக்கு வீட்டு பெண் போன்ற எண்ணத்தை தனது எளிமையான லுக்கால் பதியவைத்தவர் ஸ்ரீதிவ்யா.

Also Read  ஓடிடியில் 'ஜகமே தந்திரம்': ஏமாற்றத்தை வெளிப்படுத்திய தனுஷ்… விளக்கமளித்த தயாரிப்பாளர்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு சிவாங்கி அறிமுகமானாலும் தனது கியூட் வாய்சால் குக் வித் கோமாளியில் அனைவரையும் கவர்ந்தவர் இவர்.

தற்போது நிறைவடைந்த குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் இவருக்கும் அஷ்வினுக்குமான லவ் டிராக் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இவரும் புகழும் அடிக்கும் அண்ணன்-தங்கை லூட்டிகள் கலகல ரகம். இவர் தற்போது சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Also Read  விஷால்-ஆர்யா இணைந்து நடிக்கும் 'எனிமி' படத்தின் டீசர் வெளியீடு குறித்த சூப்பர் அப்டேட்…!

இப்படி காமெடி, ஹீரோ, ஹீரோயின் மற்றும் சின்னத்திரை என அந்தந்த ரோலில் முன்னணி வகிப்பவர்களான இந்த 4 பேருக்கும் இன்று தான் பிறந்தநாள்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சின்ன பட்ஜெட் படத்தில் விஜய்சேதுபதி வந்தது தேவையா?…. பிரபல தயாரிப்பாளரின் பரபரப்பு பேச்சு…!

Tamil Mint

‘குக்கு வித் கோமாளி’ கனி வீட்டில் காரக்குழம்பு சாப்பிட்ட பிரபல ஹீரோ…! வைரல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

ரிலீஸுக்கு தயாராகும் ‘குக் வித் கோமாளி’ பிரபலத்தின் திரைப்படம்…!

Lekha Shree

‘அஞ்சான்’ பட நடிகர் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

ராஜா ராணி சஞ்சீவ்,ஆல்யா தம்பதியின் கியூட் குழந்தை – வைரலான வீடியோ…!”

HariHara Suthan

சுரேஷ் ரெய்னாவுடன் விஜய் டிவி பிரபலம் எடுத்து கொண்ட புகைப்படம் இதோ…!

Lekha Shree

“தளபதி 65” 2ம் கட்ட படப்பிடிப்பு : படக்குழு எடுத்த முக்கிய முடிவு…!

sathya suganthi

சன் டி.வி.யின் பிரபல சீரியல் விரைவில் நிறுத்தமா?… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!

Tamil Mint

அப்போ ரொமான்ஸுக்கு பஞ்சமில்லை… 3வது ராஷ்மிகா மந்தனாவுடன் இணையும் டாப் ஹீரோ…!

HariHara Suthan

‘புதுப்பேட்டை’ படத்தில் சினேகா ரோலில் முதலில் நடிக்கவிருந்தவர் யார் தெரியுமா?

Lekha Shree

குக் வித் கோமாளி 3 எப்போது? Chef தாமு வெளியிட்ட மாஸ் அப்டேட்..!

Lekha Shree

தமிழில் அதிக படங்களில் நடிக்கும் நடிகை யார் தெரியுமா?

Lekha Shree