“38,000 பெண்களுக்கு தலா 5 ஆடுகள்” – தமிழக அரசு அரசாணை…


ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக மாற்றுவதற்காக 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறியாடுகள் / வெள்ளாடுகள் வழங்க ரூ.75 கோடியே 63 லட்ச ரூபாய் ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆதரவற்ற 38 ஆயிரம் ஆதரவற்ற பெண்களுக்கு தலா ஐந்து ஆடுகள் என ஒரு லட்சத்து 94 ஆயிரம் ஆடுகள் வாங்க நிதியை ஒதுக்கியது தமிழ்நாடு அரசு.

Also Read  துரைமுருகன் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்த திமுக நிர்வாகி! விசித்திர பதிலால் ஸ்டாலின் அதிர்ச்சி!

இந்த பயனாளிகளில் குறைந்தது 30 % எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினரைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும், நிலங்கள் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், ஆதரவற்ற பெண்கள் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் எனவும், பயனாளிகள் ஏற்கனவே ஆடுகள், மாடுகள் வைத்திருக்க கூடாது  எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிவாய்ந்த பயனாளர்களை தேர்ந்தெடுக்கவும், அதனை முறைப்படி வழங்குவதை கண்காணிக்கவும் கால்நடைத்துறையின் துணை இயக்குனர் தலைமையில் குழு அமைத்தும் அரசு உத்தரவிட்டுள்ளது.

Also Read  பிரசாந்த் கிஷோர் மிரட்டப்பட்டாரா…! ஐபேக்கில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பு ஏன்…?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாளை செய்தியாளர் சந்திப்பு: ஓபிஎஸ் சூசகம்

Tamil Mint

சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி

Tamil Mint

அதிமுக செயற்குழு- எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் வருகை

Tamil Mint

“ஊரடங்கு தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்..” ஸ்டாலின் பேச்சு

Ramya Tamil

கலவரத்தை தூண்டும் பேச்சு..! – சாட்டை துரைமுருகன் கைது..!

Lekha Shree

கொரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது – அமைச்சரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை

sathya suganthi

லிவிங் டுகெதர்-ல் வாழ்பவர்கள் நீதிமன்றம் நாட எந்த உரிமையும் இல்லை – உயர்நீதிமன்றம்!

suma lekha

பிச்சை எடுப்பது போல் நடித்து கொள்ளையடித்த நபர் கைது…!

Lekha Shree

‘மழை விட்டுடுச்சா?’ – இதோ வானிலை மையத்தின் புதிய அறிவிப்பு…!

Lekha Shree

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மீது வழக்குப்பதிவு

sathya suganthi

“கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் 56 நாட்களுக்கு ரத்த தானம் வழங்க கூடாது” – தேசிய ரத்த பரிமாற்ற கவுன்சில்

Lekha Shree

நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்; அசத்திய கோவை தம்பதி!

Shanmugapriya