நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 வகையான நெல்லி ஜூஸ்…! முழு விவரம் உள்ளே..!


நெல்லிக்காயில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, நோய் எதிர்ப்பு சக்தி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், தையாமின், ரிபோஃப்ளேவின் மற்றும் நியாசின் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.

நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்துள்ளதால் தொற்றுநோய்கள் அண்டாமல் இருக்க பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது.

இந்த மழைக்காலத்தில் நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்ல 5 வகையான நெல்லிக்காய் ஜூஸ் குறித்து பார்ப்போம்.

நெல்லிக்காய் ஜூஸ்:

நெல்லிக்காய் ஜூஸ் தயாரிக்க 5 நெல்லிக்காய்களை எடுத்து விதைகளை நீக்கி, சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவேண்டும்.

அதனுடன் 1 துண்டு இஞ்சி மற்றும் 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகளை சேர்த்து தேவையான அளவு தண்ணீர், தேன் சேர்த்து அரைத்து அந்த சாற்றை பருகலாம். இதில் கொத்தமல்லிக்கு பதிலாக புதினா இலைகளை சேர்க்கலாம்.

Also Read  கருப்பு பூஞ்சை நோய் - யாரை அதிகம் பாதிக்கும்?

இந்த ஜூஸை தினமும் காலையில் குடித்து வர இதயம் பலம் பெறும், ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். மேலும், இருமல், தலைவலிக்கு அருமருந்தாக இந்த ஜூஸ் அமையும்.

நெல்லிக்காய்-கற்றாழை ஜூஸ்:

நெல்லிக்காய் மற்றும் கற்றாழை சமஅளவு எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டையும் சேர்த்து அரைத்து சாற்றை எடுத்துக்கொள்ளவும்.

இந்த பானத்தை குடித்து வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும்.

இந்த ஜூஸை தினமும் காலை வேளையில் அருந்தினால் வைட்டமின் சத்துக்கள் கிடைத்து தலைமுடி நன்றாக வளரும்.

நெல்லிக்காய் சர்பத்:

நெல்லிக்காய் சாற்றுடன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, மிளகு தூள், தண்ணீர் சேர்ந்து ஒன்றாக கலந்து அருந்தவும்.

Also Read  முகப்பருவை நீக்க இந்த ஒரு பொருள் போதும்..! முழு விவரம் உள்ளே..!

இந்த சர்பத் செரிமானத்திற்கு மிகவும் நல்லது. மேலும், கண்பார்வை மேம்படவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும், கல்லீரல், இதயம், எலும்புகள் பலப்படவும், மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது.

இந்த நெல்லிக்காய் ஜூஸானது தொடர்ந்து பருகி வருபவர்களுக்கு கண்களில் உள்ள கருவிழியின் திசுக்களின் வளர்ச்சி குறைபாடை தடுத்து, கண்புரை வரும் வாய்ப்பை குறைக்கும்.

நெல்லிக்காய்-தேன் பானம்:

நெல்லிக்காயை அரைத்து சாறெடுத்து தேன் கலந்து தினமும் பருகி வருவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் கூந்தலுக்கும் நல்லது.

இந்த பானம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. மேலும், இந்த நெல்லிக்காய் ஜூஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் தினமும் காலையில் 20-30 மில்லி அளவு பருகினால் உடலில் கொழுப்பு படிவதை குறைக்கும்.

Also Read  உடல் பருமனை குறைக்க உதவும் 10 காய்கறிகள்!

நெல்லிக்காய்-பாகற்காய் ஜூஸ்:

நெல்லிக்காய் சாறு, பாகற்காய் சாறு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பருகவேண்டும். கசப்பு சுவை பிடிக்காதவர்கள் சிறிதளவு தேன் சேர்த்து கொள்ளலாம்.

இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகவும் செயல்படுகிறது . தினமும் காலையில் இந்த ஜூஸ் அருந்தி வந்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுத்தன்மை வெளியேறி, தோலில் ஏற்படும் வறட்சியை நீக்கும்.

சருமம் பளபளப்பாக இருக்கும். மேலும், முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுப்பதோடு தோல் சுருக்கங்களை நீக்கி இளமை தோற்றத்தை அளிக்கும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஹார்மோன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் 5 சூப்பர் உணவுகள்!

Lekha Shree

கொரோனாவின் கடும் பாதிப்பை குறைக்கும் உடற்பயிற்சி! முழு விவரம் இதோ..!

Lekha Shree

“வீட்டிற்குள்ளும் இந்தியர்கள் முகக் கவசம் அணிய வேண்டும்” -அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் எச்சரிக்கை!

Shanmugapriya

“இப்படிக்கூட பண்ணலாமா!” – வைரலாகும் ‘Fanta ஆம்லெட்’ வீடியோ… அலறும் நெட்டிசன்கள்..!

Lekha Shree

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க 5 சூப்பர் டிப்ஸ்!

Lekha Shree

வெயிட் லாஸ் செய்ய சிறந்த 5 காலை உணவுகள்!

Lekha Shree

டெங்கு பாதித்தவர்களை அதிகம் தாக்கும் கொரோனா – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Lekha Shree

உடல் எடையை குறைக்க வேண்டுமா? – இந்த 2 பொருட்கள் போதும்!

Lekha Shree

பிளம்ஸ் பழத்தில் மறைந்துள்ள ஹெல்த் பிளஸ் என்னென்ன? முழுதாய் அறியலாம்!

Lekha Shree

ஆரோக்கியமற்ற உணவால் கொரோனா அதிகரிக்குமா? மருத்துவர்கள் கூறும் விளக்கம்..!

Lekha Shree

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. லாக்டவுன் 2.O? அச்சத்தில் மக்கள்…!

HariHara Suthan

கோடையில் ஏற்படும் வியர்வை துர்நாற்றத்தை போக்க சில எளிய டிப்ஸ்…!

Lekha Shree