திருப்பதி: ஆபத்தான நிலையில் 500 ஆண்டுகள் பழமையான ஏரி..! அச்சத்தில் மக்கள்..!


ஆந்திர மாநிலத்தில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருப்பதியில் பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளக்காடாக மாறியுள்ளது.

இதன்காரணமாக ராயலசெருவு என்ற ஏரியில் தற்போது 90 சதவீத அளவு நீர் இருப்பு உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இந்த ஏரிக்கு 90% இருப்பு இருக்கும் வகையில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது கிடையாது எனவும் கடந்த சில நாட்களாக நீர் கசிவு ஏற்பட்டு வருவதால் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும் எனவும் அஞ்சப்படுகிறது.

Also Read  கையில் குழந்தை... சூட்கேசில் மனைவியின் பிணம்... கணவரின் கொடூர கொலை!

இந்த ஏரி திருப்பதியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது கிபி 1564 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த ஏரி 450 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 1 டிஎம்சி.

இந்த ஏரியின் கீழ் பகுதியில் 20 கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், இந்த ஏரி எப்போது வேண்டுமானாலும் உடையும் அபாயம் இருப்பதால் அந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களை நேற்று முதல் அதிகாரிகள் வெளியேற்றி முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர்.

Also Read  இனி 6 மணி நேரம் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி.. அமலுக்கு வரும் பகுதி நேர ஊரடங்கு..

சித்தூர் மாவட்ட ஆட்சியர், டிஎஸ்பி, வருவாய் துறை உயரதிகாரிகள், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் நேற்று மாலை முதல் அங்கேயே முகாமிட்டு ஏரியின் நிலையை கண்காணித்து வருகின்றனர்.

மேலும், அவசர காலத் தேவைக்காக போலீசார், தீயணைப்பு துறையின,ர் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் ஆகியோர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களாக அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.

Also Read  விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டுவீட் - பெண் சுற்றுச்சூழலியல் ஆர்வலர் கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மத்திய உள் துறை அமைச்சர் அமீத் ஷாவின் சென்னை நிகழ்ச்சி நிரல் அதிகாரபூர்வ அறிவிப்பு.

Tamil Mint

ராமர் கோவிலுக்கு நன்கொடை வழங்காததால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்?

Lekha Shree

PUBG-ன் புதிய பரிணாமமான Battlegrounds Mobile India விளையாட்டுக்கான முன்பதிவு தொடக்கம்…!

Lekha Shree

‘பெகாசஸ்’ விவகாரம்: தமிழில் முழக்கமிட்ட பஞ்சாப் எம்.பி… அதிர்ந்த நாடாளுமன்றம்..!

Lekha Shree

அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி

Tamil Mint

ட்விட்டர் நிறுவனத்தின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு!

Shanmugapriya

கொரோனா தடுப்பூசி குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இதோ!

Tamil Mint

“பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசு மீது பழி போட்டால் போட்டுக்கொள்ளுங்கள்” – நிர்மலா சீதாராமன்

Shanmugapriya

கோழிக்கோடு விமான நிலையம் பாதுகாப்பானதா? அதிர்ச்சித் தகவல்கள்

Tamil Mint

‘காதல் கோட்டை’ பட பாணியில் ஒரு நிஜ காதல் கதை…! காதலியின் வரவை எதிர்நோக்கும் காதலன்!

Lekha Shree

கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போடலாமா? வழிகாட்டுதல் நெறிமுறை வெளியீடு…!

sathya suganthi

ஐ.டி.ஊழியர்களாக நீங்கள்…! உங்களுக்காக பிரதமர் மோடி போட்ட சூப்பர் டுவிட் இதோ…!

sathya suganthi