சிவசங்கர் பாபா மீது 5-வது போக்சோ வழக்கு… பள்ளியின் ரகசிய அறையை திறக்க முடிவு!!!


சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த சாத்தங்குப்பம் பகுதியில் ‘சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி’ இயங்கி வருகின்றது. இந்த பள்ளியின் நிறுவனராக பிரபல நடன சாமியாரான சிவசங்கர் பாபா உள்ளார். அப்பள்ளியில் படித்து வரும் மாணவிகளை ஆசிர்வாதம் வழங்குவதாக கூறி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்தரங்க அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக முன்னாள் மாணவிகள் பலர் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சிவசங்கர் பாபா மீது புகார் அளித்தனர்.

Also Read  ஜோதிகாவின் படத்தால் வெளிவந்த உண்மை! - சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறை..!

போலீசார் விசாரணையில், சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியில் படித்து வரும் 8 முதல் 12ம் வகுப்பு மாணவிகளை அழைத்து பாலியல் தொந்தரவு செய்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து மாமல்லபுரம் அனைத்து காவல் நிலைய போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் சிவசங்கர் பாபாவால் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரமத்திற்கு வந்த பெண்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அதைதொடர்ந்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பிறகு சிபிசிஐடி போலீசார் டெல்லியில் மறைந்து இருந்த சிவசங்கர் பாபாவை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


சிவசங்கர் பாபா மீது 5 போக்சோ வழக்குகள், ஒரு பெண் வன்கொடுமை வழக்கு என மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 5வது வழக்கிலும் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவின் பள்ளியில் உள்ள ரகசிய அறையில் முக்கிய ஆவணங்கள், வீடியோ ஆதாரங்கள் சிக்க வாய்ப்புள்ளது. சுசில் ஹரி பள்ளியில் உள்ள அந்த ரகசிய அறையை சிபிசிஐடி போலீசார் திறக்க முடிவு செய்துள்ளனர். சிவகங்கர் பாபாவின் கை ரேகை பதிவு  இருந்தால் மட்டுமே ரகசிய அறையை திறக்க முடியும். எனவே, செங்கல்பட்டு நீதிமன்றத்தின் அனுமதியோடு  பள்ளி அறையை திறக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Also Read  பண மோசடி வழக்கில் சிக்கிய பாலிவுட் நடிகை நோரா ஃபதேகி..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வேலூர்: கள்ள ஓட்டு போட முயன்ற திமுக பிரமுகர்… தட்டிக்கேட்ட அதிமுக பிரமுகருக்கு கத்திக்குத்து..!

Lekha Shree

“பெரும் கிளர்ச்சி வெடிக்கும்!” – லக்கிம்பூர் விவகாரம் குறித்து ராகுல் காந்தி எச்சரிக்கை..!

Lekha Shree

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பெயரில் போலி கணக்கு…!

Lekha Shree

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 300 பேர் கொலை.! Top List-ல் தூத்துக்குடி, மதுரை.!

mani maran

லஞ்சப் புகாரில் மத்திய பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் கைது: ஒப்பந்ததாரர்களும் கையும் களவுமாக சிக்கினர்

sathya suganthi

ஹேலோ நாங்க சைபர் கிரைம் போலீசார் பேசுறோம் “ஆபாச வீடியோ பாத்தியா”: மாணவனை மிரட்டி பணம் பறித்த நபர்கள் கைது.

mani maran

மரியாதை தராத மாமியாருக்கும் மச்சினிக்கும் உணவில் விஷத்தை வைத்த மாப்பிள்ளை….

VIGNESH PERUMAL

சீனாவை உலுக்கிய கொலை சம்பவம் – நல்லடக்கத்தில் ஆள் மாறாட்டம்!

Lekha Shree

பட்டப்பகலில் வங்கி மேலாளரை சுட்டுக் கொன்று பணம் கொள்ளை!!!

Lekha Shree

கோடநாடு வழக்கில் மேல் விசாரணைக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம்

Lekha Shree

கொடுத்த கடனை திருப்பி கேட்டால் இப்படியா செய்வது…. அரசு நடத்துனருக்கு நடந்த கொடூரம்….

VIGNESH PERUMAL

மின் இணைப்பு வழங்க 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது…..

VIGNESH PERUMAL