a

இனி 6 மணி நேரம் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி.. அமலுக்கு வரும் பகுதி நேர ஊரடங்கு..


கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதன் காரணமாக, நாளை மறுதினம் முதல் ஆந்திராவில் பகுதி ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.. இதனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா தினசரி கொரோனா எண்ணிக்கையில் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.. இதனால் பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

Also Read  பாலிவுட்டை கலங்கடிக்கும் கொரோனா! ரன்பீர் கபூர், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டவர்களுக்கு பாசிட்டீவ்!

இந்நிலையில் கொரோனா நிலைமை குறித்து ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜகன்மோகன் ரெட்டி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் கோவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்தனர். அதனடிப்படையில் ஆந்திராவில் பகுதி நேர ஊரடங்கு நாளை மறு தினம் முதல் அமலுக்கு வர உள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் இரண்டு வார காலத்திற்கு நடைமுறையில் இருக்கும்.

Also Read  கொரோனாவின் கோரத்தாண்டவம் - இந்தியாவுக்கு உதவ முன்வந்த உலக நாடுகள்..!

கடைகள் மற்றும் நிறுவனங்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

மதியம் 12 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.
அவசரகால சேவைகள் மட்டுமே காலை 6 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

Also Read  மேற்கு வங்காளம்: கவர்னரை பதவி நீக்கம் செய்ய கோரி ஜனாதிபதிக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடிதம்!!

கடந்த சில நாட்களாக, கோவிட் -19 நிலைமையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இருப்பினும், கொரோனா பாதிப்பு வேகமாக பரவுவதால், மேலதிக கட்டுப்பாடுகளை விதிக்க முதல்வர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி

Tamil Mint

டிரைவிங் லைசன்ஸ் காலக்கெடு நீட்டிப்பு

Tamil Mint

ககன்யான் திட்டம் தாமதமாகலாம்’:

Tamil Mint

விலைவாசி உயர்வா?… அதெல்லாம் பழகிடும்பா…! – சர்ச்சையை கிளப்பிய பீகார் அமைச்சரின் பேச்சு

Lekha Shree

தந்தை பாசத்தால் உத்திரப்பிரதேச முதல்வரை நெகிழ வைத்த சிறுமி

Tamil Mint

உ.பி. இளம் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம்:

Tamil Mint

இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்

Tamil Mint

அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி

Tamil Mint

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 24,492 பேருக்கு பாதிப்பு

Devaraj

நாட்டிற்கே மோடி பெயர் வைக்கும் நிலை வரும் – கொதித்த மம்தா!

HariHara Suthan

டிக்டாக் செயலி இந்தியாவில் மூடல்…. 2,000 தொழிலாளர்கள் வேலையிழப்பு…

Tamil Mint

கொரோனாவால் பெண் உயிரிழப்பு – மருத்துவமனைக்கு தீ வைத்து சூறையாடிய உறவினர்கள்…!

Devaraj