#JusticeForChaitra… பாலியல் வன்கொடுமைக்கு ஆளக்கப்பட்டு 6 வயது சிறுமி கொலை.. ஹைதராபாத்தில் கொடூரம்..!


ஹைதரபாத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு 6 வயது சிறுமி கொலை செய்யபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள சைதாபாத் காவல் நிலையத்தில் சைத்ரா என்ற 6 வயது சிறுமியின் பெற்றோர் தங்கள் மகள் காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதி முழுவதும் சிறுமியை தேடியுள்ளனர். ஆனால், சைத்ராவை கண்டுப்பிடிக்க முடியவில்லை. பின்னர், பெற்றோரிடம் தீவிர விசாரணை ஈடுப்பட்ட போலீசார், யார்மீதாவது சந்தேகம் உள்ளதா என்று அவர்களிடம் கேட்டுள்ளனர். அப்போது சைத்ராவின் தாயார், தங்கள் பக்கத்து வீட்டை சேர்ந்த 30 வயதான் ராஜூ என்பவர் மீது சந்தேகம் உள்ளதாகவும், சைத்ரா காணாமல்போன நாள் முதல் ராஜூ வீட்டிற்கே வரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சைத்ராவின் பெற்றோர் ராஜூ மீது புகார் அளித்தனர்.

Also Read  காதல் மனைவியை துண்டுதுண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்த கொடூரன் - ஆந்திராவில் பகீர் சம்பவம்…!

இதனைத்தொடர்ந்து ராஜூவின் வீட்டை சோதனை செய்த போலீசாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ராஜூவின் வீட்டில் போர்வையால் சுருட்டப்பட்டிருந்த சிறுமி சைத்ராவின் சடலத்தை போலீசார் கண்டுப்பிடித்தனர். அப்போது சைத்ரா உடலின் கீழ் பகுதியில் ஆடையில்லாமல் இருந்துள்ளது. மேலும், சைத்ராவின் உடலில் பிறப்புறுப்பு உட்பட பல இடங்களில் காயங்கள் இருந்துள்ளன.

சைத்ராவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது சைத்ரா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. சைத்ராவின் பிறப்புறுப்பில் பலத்த காயமும், தலையில் பலமாக அடித்துள்ளது போன்ற அடையாளமும் உள்ளதாக பிரேத பரிசோதனையின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!

சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த அந்த ராஜூ, சைத்ரா உயிருடன் இருந்த போது அவருடன் நட்பாக பழகியதாவும், சைத்ராவை நன்றாக கவனித்துக் கொண்டதாகவும், அதனால்தான் சைத்ராவின் பெற்றோர் ராஜூவை நம்பி பழக அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது.

சைத்ராவின் மரணத்தை தொடர்ந்து, அவரது உறவினர் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து கொலைகார ராஜூவை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அங்கு விரைந்து வந்த போலீசார், விரைவில் ராஜூவை கைது செய்வதாக உறுதிமொழி அளித்தனர். பின்னர், ராஜூ மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Also Read  கொரோனாவை விரட்ட சிறப்பு பூஜை நடத்திய உ.பி. முதலமைச்சர்…!

ராஜூ இன்னும் தலைமறைவாகத்தான் உள்ளான். போலீசார் தீவிரமாக ராஜூவை தேடி வருகின்றனர். சைத்ரா தனது நண்பர்களுடன் விளையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, இது பார்க்க மிகுந்த வேதனை அளிப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். சைத்ராவுக்கான நீதி கேட்டு ட்விட்டரில் #JusticeForChaitra என்ற ஹேஷ்டேக் மூலம் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்டிய எம்.எல்.ஏ…!

Lekha Shree

தேர்தல் பிரச்சாரத்திற்காக முதல்முறையாக தமிழகம் வரும் பிரியங்கா காந்தி!

Shanmugapriya

திணறும் கேரளா.. இன்று ஒரே நாளில் 41,971 பேருக்கு கொரோனா பாதிப்பு

Ramya Tamil

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி

Tamil Mint

111 நாடுகளில் வேகமாக பரவும் டெல்டா வைரஸ்… எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு..!

Lekha Shree

இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு வரும் 2021 பிப்ரவரி மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது!!

Tamil Mint

தடுப்பூசி போட்டுக்கொண்ட சில நாட்களில் நடிகை நக்மாவுக்கு கொரோனா தொற்று…!

Devaraj

யாஸ் புயல் சேதங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் – பாதியில் வெளியேறிய முதல்வர் மம்தா பானர்ஜி!

Lekha Shree

“தரமான முக கவசத்தை அணியுங்கள் ” – கொரோனா மூன்றாம் அலையை தடுக்க மருத்துவர்கள் யோசனை

Shanmugapriya

ரூ.200 கோடி பண மோசடி வழக்கில் கைதான ‘பிரியாணி’ பட நடிகை…!

Lekha Shree

இந்தியாவின் தவறான வரைபடம் – சர்ச்சையில் சிக்கிய ட்விட்டர்..!

Lekha Shree

கொலை குற்றம் – மல்யுத்த வீரர் சுஷில் குமார் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம்!

Lekha Shree