அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம்


அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் வழங்கப்பட்ட 7.5% இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க கோரி தனியார் பள்ளி மாணவி பூஜா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 

“7.5% இடஒதுக்கீடு சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்கமுடியாது”  என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தனியார் பள்ளி மாணவி பூஜா என்பவர் 7.5% இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். 

“கடந்த மூன்று முறை நான் நீட் தேர்வில் கலந்துகொண்டு 565 மதிப்பெண் எடுத்து இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில், 7.5% இட ஒதுக்கீடு அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வழங்கும் அரசாணை மூலம் தனது வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. மேலும் 135 மதிப்பெண் எடுத்தவர்களுக்கு கூட இடம் அளிக்கப்பட்டு இருப்பதால் அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” என பூஜா கேட்டுக்கொண்டார்.

Also Read  கனிமொழி மீது 5 பிரிவுகளில் வழக்கு

அரசு தரப்பில், ஏற்கனவே 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் இடம் கிடைத்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு பணம் செலுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதே போல மனுதாரர் கோரிக்கையை ஏற்று அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க கூடாது என்றும், பதிலளிப்பதற்கு அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர். 

Also Read  முதல்வராக வேண்டும் என கனவு கூட காண முடியாது: எடப்பாடியை விளாசிய ஸ்டாலின்

அப்போது மனுதாரர் தரப்பில் குறுக்கிட்டு,  7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இடம் பெற்ற 405 மாணவர் சேர்க்கை நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட கோரிக்கை வைத்தனர். 

ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் தலைக்கு மேலாக கத்தி தொங்குவதை நீதிமன்றம் அனுமதிக்காது என்றுகூறி வழக்கை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Also Read  பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் ஏன் கொரோனா பாதிப்பு குறைவு? - சுகாதார அதிகாரியின் தந்த விளக்கம்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கு விரைவில் சம்மன்

Tamil Mint

சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு.! இல்லத்தரசிகள் தலையில் இடியை போட்ட அறிவிப்பு!

Lekha Shree

காவல்துறையினரின் காலில் விழுந்து கதறிய ‘பப்ஜி’ மதன்…!

Lekha Shree

தனியார் பள்ளிகளில் இலவசமாக படிக்க வேண்டுமா? அப்போ இத தெரிஞ்சிக்கோங்க..!

suma lekha

யூடியூபர் மதனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்…!

Lekha Shree

டுவிட்டர், பேஸ்புக் கணக்கில் மு.க.ஸ்டாலின் செய்த அசத்தலான மாற்றம்…!

sathya suganthi

இனி ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் வரை செல்லும்.!

suma lekha

தொழிலதிபரை மணக்கிறாரா பிக் பாஸ் ஜூலி?

Tamil Mint

தமிழகம்: +2 பொதுத்தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு..!

Lekha Shree

கொரோனா அப்டேட் – சென்னையில் ஒரே நாளில் 559 பேர் பாதிப்பு…!

Lekha Shree

தமிழக அமைச்சர்களின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 111% உயர்வு…!

Devaraj

சிறையில் உள்ள சசிகலாவுக்காக வங்கி வரைவோலை எடுத்தவர்களின் விவரம் வெளியானது

Tamil Mint