7,287 கிராமங்களுக்கு 4ஜி சேவை – மத்திய அரசு ஒப்புதல்..!


ஆந்திரா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் செல்போன் சேவை கிடைக்கப்பெறாத கிராமங்களுக்கு மொபைல் டவர் அமைக்கவும் அலைபேசி சேவையை வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 7,287 கிராமங்களுக்கு 4ஜி செல்போன் சேவையை வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூபாய் 6466 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Also Read  ஜீன்ஸ் அணிந்த சிறுமியை அடித்தே கொன்ற உறவினர்.!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை செல்போன் சேவை கிடைக்கப்பெறாத கிராமங்களில் 4ஜி செல்போன் சேவை வழங்குவதற்கான பணிகள், திறந்தவெளி போட்டி மூலம் உலகளாவிய சேவை உதவி நிதியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்பட உள்ளது.

Also Read  கொரோனா 2ம் அலை தீவிரம் - இந்தியாவிற்கு கைகொடுக்கும் நியூயார்க்!

தொலைதூர மற்றும் சேவை கிடைக்கப்பெறாத சிக்கலான கிராமங்களுக்கு செல்போன் சேவை வழங்குவதற்கான இந்த புதிய திட்டம் தற்சார்புக்கான டிஜிட்டல் இணைப்பு வசதியை மேம்படுத்தவும், கல்வி கற்கவும், தகவல்கள் மற்றும் அறிவாற்றல் வெளிப்படுத்தவும், திறன் மேம்பாடு, பேரிடர் மேலாண்மை, மின்னணு ஆளுகை முயற்சிகள் மற்றும் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கு உதவிகரமாக இருக்கும் என மத்திய அரசு கருதுகிறது.

மேலும், மின்னணு வர்த்தகத்திற்கும் கல்வி நிறுவனங்கள் அறிவாற்றலை பகிர்ந்து கொள்ளவும், வேலைவாய்ப்புகளை அறிந்து கொள்ளவும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றி உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து தற்சார்பு இந்தியாவின் குறிக்கோள்களை நிறைவேற்றவும் இந்த திட்டம் உறுதுணையாக இருக்கும் என கூறப்படுகிறது.

Also Read  குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் அளவு குறைகிறது - தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பு...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ்தான் காரணம் – பாஜக

Shanmugapriya

முதலாளியின் மனைவியை கொலை செய்த காம கொடூரன்!

Lekha Shree

“திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது குற்றம்” – நாக்பூர் நீதிமன்றம்

Lekha Shree

1983 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெற்ற யஷ்பால் சர்மா காலமானார்…!

Lekha Shree

இந்தியா: கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 94.22 லட்சத்தை தாண்டியது

Tamil Mint

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ரிஷிகங்கா நீர்மின் நிலையம் – 16 பேர் பலி

Tamil Mint

கொரோனா பாதிப்பால் மரத்தில் கட்டிலை கட்டி தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட நபர்!

Shanmugapriya

தெலுங்கானாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அங்கன்வாடி ஊழியர் உயிரிழப்பு!

Tamil Mint

பட்டினி நாடுகள் பட்டியலில் 101வது இடத்திற்கு சரிந்த இந்தியா..! பிரதமர் மோடியை கலாய்த்த கபில் சிபல்..!

Lekha Shree

புதிய உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை; 15,090 புள்ளிகளை தொட்டது நிப்ஃடி

Tamil Mint

ஓலா மின்சார இருசக்கர வாகனத்தின் விற்பனைக்கான முன்பதிவு தொடக்கம்…! என்ன விலை தெரியுமா?

Lekha Shree

புதுச்சேரி முதலமைச்சராக 4வது முறையாக ரெங்கசாமி பதவியேற்பு

sathya suganthi