மெட்ரோ நகரங்களில் கொரோனா பாதிப்பு… 75% ஒமைக்ரான் தான்…! – மூத்த விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்..!


இந்தியாவில் மெட்ரோ நகரங்களில் கண்டறியப்படும் பாதிப்புகளில் 75 சதவீதம் ஒமைக்ரான் தான் என நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பரில் தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்ற புதிய வகை தொற்று மிக வேகமாக 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

Also Read  தமிழக அரசின் கொரோனா நடவடிக்கைக்கு உதவும் நடிகர்கள்…! வைரல் வீடியோ இதோ..!

இந்தியாவில் கடந்த டிசம்பர் 2ம் தேதி ஒமைக்ரான் பாதிப்பு முதன்முதலாக கண்டறியப்பட்டது. ஆனால், அசுர வேகத்தில் பரவ தொடங்கியிருக்கும் ஒமைக்ரான் தொற்றால் இதுவரை இந்தியாவில் 1700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும் 123 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இதுதொடர்பாக நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் மருத்துவர் என்.கே. அரோரா கூறுகையில், “பெரிய நகரங்களான மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் தான் 75 சதவீதம் அளவுக்கு ஒமைக்ரான் பாதித்தவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

Also Read  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு - தேர்தல் நேர யுக்தியா...?

கடந்த வாரம் தேசிய அளவிலான பாதிப்புகள் 12 சதவீதம் அளவுக்கு ஒமைக்ரான் தான் இருந்தது. அது இந்த வாரத்தில் 28 சதவீதமாக அதிகரித்துள்ளது.

15-18 வயது பிரிவினருக்கு தடுப்பூசி போடும் பணிகள் நேற்று தொடங்கி உள்ளன. இது பாதுகாப்பானதா என ஒருபுறம் சந்தேகம் கிளப்புகின்றனர். இது முற்றிலும் பாதுகாப்பானது தான்” என தெரிவித்துள்ளார்.

Also Read  ’மேகதாது அணை கட்ட விரைந்து அனுமதி வழங்குக’: கர்நாடகாவின் புதிய முதல்வர் பசவராஜ் பொம்மை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

செயற்கைக்கோள் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது பிரதமர் மோடியின் புகைப்படம்!

Tamil Mint

இந்தியா: அரிய வகை நோயால் வருடத்தில் 300 நாட்கள் தூங்கும் நபர்…!

Lekha Shree

இந்திய மகளிர் ஹாக்கி அணி பதக்கம் வென்றால் பரிசு! – வைர வியாபாரியின் அதிரடி அறிவிப்பு!

Lekha Shree

பல இடங்களில் இணைய சேவை துண்டிப்பு; விவசாயிகள் போராட்டத்தால் ஸ்தம்பித்துப்போன டெல்லி!

Tamil Mint

வரதட்சணை கேட்டு ஆணியால் குத்தி கொடுமை! நாட்டையே உலுக்கிய விஸ்மயா மரணம்…!

sathya suganthi

‘திரிஷ்யம்’ பட பாணியில் நாடகம் ஆடிய நபருக்கு சிறை…!

Lekha Shree

இந்தியாவில் 13 நாளில் 25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள்..!

Lekha Shree

மாஸ்க் சரியாக அணியாததால் கண்மூடித்தனமாக தாக்கிய காவலர்கள்…! கதறி அழுத மகன்…! நெஞ்சை ரணமாக்கும் வீடியோ…!

Devaraj

“அதிக சத்தத்துடன் பாட்டு கேட்பவர்களை பேருந்திலிருந்து இறக்கிவிடலாம்!” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

Lekha Shree

சானிடைசர் ஆலையில் பயங்கர தீவிபத்து: 18 தொழிலாளர்கள் பலி

sathya suganthi

“குட்டி சிரு வந்துவிட்டார்” – மகன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மேக்னா ராஜ்

Tamil Mint