தமிழகம்: சென்னை உட்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!


வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், “வங்கக்கடல் பகுதியில் கடந்த 13ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

Also Read  ஏழை மக்களுக்கு உதவ நிக்கிகல்ராணி புதிய முயற்சி!

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆந்திரா, வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக் கூடும்.

இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் கனமழையும் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Also Read  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் சீட்டு வினியோகம் ஆரம்பம்…!

இதனை அடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

Also Read  தமிழகத்தில் 3000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

இன்றும் நாளையும் மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடல், ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்திலும் நுழைந்தது கருப்பு பூஞ்சை நோய் – 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

sathya suganthi

தமிழகம்: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..!

Lekha Shree

நீட் தோல்வி பயம்: அரியலூரில் ஒரு மாணவி தற்கொலை!

suma lekha

“எடப்பாடி தொகுதியில் அதிமுக மண்ணை கவ்வும்!” – விஜயபிரபாகரன்

Lekha Shree

அதிமுக கூட்டணியில் பாமக? வன்னியர் இடஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு?

Tamil Mint

PSBB பள்ளி இருக்கும் நிலத்தை காமராஜர் வழங்கியது ஏன்? ஏமாற்றி மாற்றியமைக்கப்பட்டதா அந்த பள்ளி?

sathya suganthi

ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

பூந்தமல்லி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட அதிகாரிகள்! வைரல் வீடியோ!

Lekha Shree

தமிழகத்தில் 23ம் தேதி முதல் 50% பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதி.!

suma lekha

100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி..!

suma lekha

சசிகலாவை சந்திக்கும் பிரபலங்கள் – எம்எல்ஏக்களும் சந்திக்கப்போகும் தகவலால் அ.தி.மு.க. அதிர்ச்சி

Jaya Thilagan

அரசு அதிகாரிக்கு இவ்வளவு சொத்தா? அம்பலமான அதிர்ச்சித் தகவல்…

Tamil Mint