a

கள்ள சந்தையில் விற்பனையாகும் போலி ரெம்டெசிவிர்! கண்டுபிடிக்க 8 வழிகள் இதோ!


நாடு முழுவதும் கொரோனா 2வது அலை கோர தாண்டவமாடி வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதில் ரெம்டெசிவிர் மருந்து முக்கிய பங்காற்றி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் இந்த மருத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஒரு டோஸ் ரூ.899க்கு விற்கப்படும் நிலையில், தட்டுப்பாட்டை பயன்படுத்தி சிலர் இந்த மருந்தை பதுக்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று அந்நியாய லாபம் ஈட்டி வருகின்றனர்.

மற்றொரு புறம், மனிதாபிமானமற்ற வகையில் ரெம்டெசிவிர் போலி மருந்தை தயாரித்து கொள்ளை விலைக்கு விற்று மக்கள் உயிரோடு விளையாடி வருகின்றனர்.

Also Read  கொரோனாவுக்கு எதிராகப் போராடுவோம் - விராட் கோலி அட்வைஸ்!

அந்த வகையில் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போலி ரெம்டெவிசிர் மருந்தை விற்றதாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து போலி ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் கைப்பற்றி உள்ளனர்.

இந்த நிலையில் உண்மையான ரெம்டெசிவர் மருந்துக்கும் போலிக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கி டெல்லி போலீஸ் துணை கமிஷனர் மோனிகா பரத்வாஜ் ட்வீட் செய்துள்ளார். அதன்படி, போலி மருந்தை கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள் இதோ…

1.போலி ரெம்டெசிவிர் மருந்து அட்டையில், ‘ரெம்டெசிவிர்’ என்ற பெயருக்கு மேலே ‘ஆர்எக்ஸ்’ என்ற குறியீடு இருக்காது

2.உண்மையான மருந்து பாட்டில் அட்டையில் மருந்து பெயரின் 3வது வரியில் 100 mg/Vial என வயல் (குப்பி) என்பதன் முதல் எழுத்து பெரிய (கேபிட்டல்) எழுத்தாக இருக்கும். இதுவே போலி மருந்தில் வயல் என்பதில் முதல் எழுந்து சிறிய எழுத்தாக அச்சிடப்பட்டுள்ளது

Also Read  கொரோனாவால் கைதிகளுக்கு அடித்த ஜாக்பாட்...!

3.இதன் பிராண்ட் பெயர் (கோவிஃபார்) அச்சிடப்பட்ட இடத்தில், போலி மருந்தில் அதிக இடைவெளி விடப்பட்டிருக்கும்

4.பிராண்ட் பெயருக்கு கீழ் வரும் வயல்(Vial) என்ற இடத்திலும் முதல் எழுத்து பெரிய எழுத்தாக இல்லாமல் இருக்கும். அதே போல, ‘For use in’ என்பதிலும் முதல் எழுத்து பெரிய எழுத்தாக அச்சிடப்பட்டிருக்காது

Also Read  பிரதமரின் சென்னை வருகைக்கு முதல் எதிர்ப்பு... ட்விட்டரில் #GoBackModi என பதிவிட்ட பிக்பாஸ் ஓவியா...!

5.அட்டையின் பின்னால், ‘வார்னிங்’ என்ற லேபிள் உண்மையான மருந்தில் சிவப்பு நிறத்திலும், போலி மருந்தில் ‘கருப்பு’ நிறமாகவும் இருக்கும்

6.வார்னிங் லேபிளுக்கு கீழே, ‘ஜிலீட் சயின்ஸ் நிறுவனத்திடம் இருந்து உரிமம் பெறப்பட்டதன் கீழ் கோவிஃ,பார் உற்பத்தி செய்யப்படுகிறது’ என்கிற முக்கிய தகவல் போலி மருந்தில் இடம் பெற்றிருக்காது

7.மருந்து தயாரிப்பு நிறுவனமான ஹிட்டிரோவின் முகவரியிலும் முதல் எழுத்து பெரிய எழுத்தாக அச்சிடப்படாமல் பிழை இருக்கும். இந்தியா என்பதில் முதல் எழுத்து பெரிய எழுத்தாக இருக்காது

8.அதே போல், தெலங்கானா என்பதிலும் ஆங்கில எழுத்துப்பிழைகள் இருக்கும்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுங்கள் – பிரியங்கா சோப்ராவுக்கு மியா கலீஃபா அட்வைஸ்!

Tamil Mint

யூடியூப் சேனலை தொடங்கிய தேசியக் கட்சி…!

Devaraj

35 கி.மீ தூரம் வரை திடீரென பின்னோக்கி சென்ற பயணிகள் ரயில்! – அதிர்ச்சி தரும் வீடியோ!

Shanmugapriya

இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு சுங்கக்கட்டணம் – மத்திய அரசு

Tamil Mint

கொரோனா வைரசின் புது வரவு…! வேகமாக பரவும் மும்முறை மரபணு மாற்றமடைந்த வைரஸ்…!

Devaraj

உங்களுக்கு 75 வயதாகிறதா? இனி Income Tax கிடையாது?

Tamil Mint

பேடிஎம்க்கு எதிராக கூகுள் சதியா?

Tamil Mint

டிசம்பர் 14 ஆம் தேதி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

Tamil Mint

உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு 62வது இடம்

Tamil Mint

24 மணி நேரத்தில் 50 லட்சம் பதிவிறக்கங்கள்! – உச்சம் தொட்ட FAU-G கேம்!

Tamil Mint

Fact Check : பெண்கள் மாதவிடாய் காலத்தில் தடுப்பூசி எடுக்கக்கூடாது என்பது உண்மையா?

Devaraj

இந்தியா: 2021 ஆம் ஆண்டில் 300 மில்லியன் டோஸ் ஸ்பூட்னிக் வி தயாரிப்பு

Tamil Mint