11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 84 வயது முதியவர்…!


84 வயது முதியவர் ஒருவர் 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக கூறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரமதேவ் என்ற 84 வயது முதியவர்,இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

தற்போது கொரோனா பரவலை தடுக்க ஒரே ஆயுதமாக கருதப்படும் கொரோனா தடுப்பூசியை பெரும்பாலும் 2 டோஸ்கள் உடன் பூஸ்டர் தோஸ் மட்டும் செலுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த முதியவர் 12வது முறையாக கொரோனா தடுப்பூசி செலுத்த சென்ற பொது சுகாதாரத்துறை ஊழியர்களிடம் பிடிபட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி முதல் தடுப்பூசி எடுத்துக் கொண்ட இவர், மார்ச் 13ஆம் தேதி 2வது டோஸ் எடுத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

Also Read  டெல்லியில் உருகிய தார் சாலைகள்...! 76 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகபட்ச வெப்பநிலை...!

அதன்பிறகு மே 19, ஜூன் 16, ஜூலை 24, ஆகஸ்ட் 31, செப்டம்பர் 11, செப்டம்பர் 22, செப்டம்பர் 24 அதற்கு அடுத்து 10வது முறையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு கடந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று 11வது முறையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்.

கடந்த 10 மாதங்களில் வெவ்வேறு இடங்களில் முதியவர் கொரோனா தடுப்பூசி செலுத்தியதாக கூறியுள்ளார். இதற்காக தனது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை பயன்படுத்தி வெவ்வேறு தருணங்களில் மனைவி, உறவினர்கள் தொலைபேசி எண்களை முதியவர் பயன்படுத்தியுள்ளார்.

Also Read  "பெண்கள் 18 வயதில் வாக்களிக்கலாம்… திருமணம் கூடாதா?" - சமாஜ்வாடி எம்.பி சர்ச்சை பேச்சு!

12-வது முறையாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்ற போது அவரது ஆவணங்களை சோதித்த சுகாதாரத்துறை ஊழியர்கள் முதியவர் ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக்கொண்டதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து சுகாதாரத்துறை ஊழியர்கள் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, தான் ஏற்கனவே பதினோரு முறை தடுப்பூசி எழுதி உள்ளதாகவும் இது தனது 12வது தடுப்பூசி எனவும் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.

Also Read  இந்தியர்களுக்கு கைலாசாவில் அனுமதி இல்லை! - நித்தியானந்தா அறிவிப்பு!

மேலும், ஒவ்வொரு முறை தடுப்பூசி செலுத்தும் போதும் முழங்கால் வலி குறைந்து சிறப்பாக உணருகிறேன் என்று முதியவர் தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி முதியவர் கூறுவது உண்மைதானா என கண்டறிய உத்தரவிட்டுள்ளார்.

ஒருவேளை விசாரணையில் முதியவர் பதினொரு முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டது உண்மை என்று கண்டறியப்பட்டால் முதியவர் மீதும் அவருக்கு தடுப்பூசி செலுத்திய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மக்களுக்கு இலவசமாக ஆக்சிஜன் வழங்கிய ஆரஞ்சு பழ வியாபாரி…!

Lekha Shree

சிறையில் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்… சிறுநீரக கோளாறு என வெளியான தகவலுக்கு சசிகலா மறுப்பு

Tamil Mint

“குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் வீடியோக்கள்” -83 பேர் மீது வழக்குப்பதிவு

Lekha Shree

இந்திய கடல் உணவு இறக்குமதியை தடை செய்த சீனா! இதுதான் காரணம்!

Lekha Shree

கொலுசுக்காக காலை வெட்டிக் கொன்ற கொடூரன்..!

Lekha Shree

அடுத்தடுத்து கைதாகும் “பாபாக்கள்” 5 திருமணம் செய்து லூட்டியடித்த போலி சாமியார் கைது…!

sathya suganthi

விமான, ஹெலிகாப்டர் விபத்துகளில் கருப்பு பெட்டியின் முக்கியத்துவம் என்ன?

Lekha Shree

“நரேந்திர மோடிக்கு வாக்களிக்காதீர்கள்” என்ற வாசகத்துடன் வைரலாகும் பெட்ரோல் பில்!

Lekha Shree

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மே மாதத்தில் 38 – 48 லட்சத்தை தொடும்..!

Lekha Shree

மக்கும் முகக்கவசம் – தொண்டு நிறுவனத்தின் அசத்தலான முயற்சி…!

Lekha Shree

சமையல் எண்ணெய் மீதான சுங்கவரி நீக்கம் – மத்திய அரசு

Lekha Shree

இந்தியா: நாடாளுமன்றத்தில் பணிபுரியும் 400 பேருக்கு கொரோனா…!

Lekha Shree