வினையான விளையாட்டு… சானிடைசரால் பறிபோன சிறுவனின் உயிர்…!


திருச்சி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட ஏ.வி.ரோட்டைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மூன்றாவது மகன் ஸ்ரீராம் அங்குள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

கொரோனா காரணமாக வீட்டில் இருந்து படித்து வந்த நிலையில் நண்பர்கள் சேர்ந்து கூட்டாக சமைத்து சாப்பிட முடிவு செய்துள்ளனர்.

ஸ்ரீராம் மற்றும் நண்பர்கள் மூன்று பேரும் அவர்களது வீடுகளிலிருந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை கொண்டு வந்துள்ளனர்.

ஸ்ரீராமன் தாயார் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் உறங்கி கொண்டு இருந்துள்ளார். அந்த நேரம் வீட்டுக்கு வெளியே வெந்நீர் வைக்கும் விறகு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளை போட்டு தண்ணீரை ஊற்றி அடுப்பு மூட்ட ஸ்ரீராம் முயற்சித்துள்ளான்.

Also Read  நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி, இணையதளத்தில் இருந்து நீக்கம்

வழக்கமாக மண்ணெண்ணை ஊற்றி அடுப்பை பற்ற வைப்பதை பார்த்த சிறுவன் நீல நிறத்தில் இருந்த சானிடைசரை ஊற்றி பற்ற வைத்துள்ளார்.

அப்போது குப்பென்று பற்றிய தீ எதிர்பாராதவிதமாக ஸ்ரீராம் மீது பரவி கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.ஸ்ரீராம் மற்றும் அவனது நண்பர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து உடனடியாக தீயை அணைத்தனர்.

Also Read  இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - ஒரே நாளில் 4.14 லட்சம் பேருக்கு தொற்று உறுதி!

மிகக் கடுமையாக முகம் கருகி உடலெல்லாம் தீக்காயமடைந்த ஸ்ரீராம் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

சிறுவர்-சிறுமிகள் வீடுகளில் இடம் ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வரும் நிலையில் விளையாட்டில் அதிக கவனம் செலுத்துவதற்கும் வாய்ப்பு உள்ளது.

Also Read  பூலித்தேவன் பிறந்தநாள் விழா ரத்து

எனவே பெற்றோர்கள் கண்காணிப்பு மிக அவசியம் என்பதை சிறுவன் ஸ்ரீராமன் உயிரிழப்பு கற்றுத்தந்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்தடைந்தது

Tamil Mint

“தமிழகத்தில் கொரோனா முழுமையாக ஒழிக்கப்படும்” – அமைச்சர் மா.சுப்ரமணியன்

Lekha Shree

விவசாயிகளுக்காக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் வீதியில் இறங்கி ஏன் விவசாயிகள் போராட போகிறார்கள்?

Tamil Mint

யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்…. “நம் இன்பம், துன்பம் இரண்டு நமக்கு ஒன்றே”… இறப்பிலும் இணைபிரியாத அன்பு…..

VIGNESH PERUMAL

பெண் எஸ்.பி பாலியல் வழக்கில் புகார் அளிக்கப்பட்ட செங்கல்பட்டு எஸ்.பி சஸ்பெண்ட்!

Lekha Shree

சிவகாசியில் பட்டாசு விபத்து தொடர்பாக மக்கள் தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம்

Tamil Mint

விநாயகர் சதுர்த்தி: மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து

Tamil Mint

ரஜினி கட்சி எப்போது? புதிய தகவல்

Tamil Mint

குஷ்பு மற்றும் கவுதமியை ஏமாற்றிய அதிமுக! அப்செட்டில் வெளியிட்ட ட்வீட் இதோ!

Lekha Shree

மோசடி மன்னனிடம் பைனான்ஸ் வாங்கி சிக்கலில் மாட்டிக் கொண்ட பிரபல தயாரிப்பாளர்கள்… அதிர்ச்சியில் தமிழ் திரையுலம்!

Tamil Mint

கூலித்தொழிலாளர் தலை வெட்டி கொலை: மதுரையில் நடந்த பகீர் சம்பவம்

Tamil Mint

தமிழகத்தில் தளர்வுகள் அறிவிப்பு…!

Lekha Shree