அமலுக்கு வந்தது மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வு…!


தமிழகத்தில் கொரோனா 2 வது அலை வேகமாக அதிகரித்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

கொரோனா பாதிப்பின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களும் 3 வகையாக பிரிக்கப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன.

ஒவ்வொரு வாரமும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது, 8-வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தளர்வுகள் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

அதன்படி மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்துக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும், பஸ்சில் குளிர்சாதன வசதி இல்லாமல், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தனியார் வாகனங்களில் செல்வோர் இ-பாஸ், இ-பதிவு இன்றி பயணிக்கலாம்.

சர்வதேச விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல்குளங்கள், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு மையங்கள், விளையாட்டு, கலாசார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இறுதிச்சடங்குகளில் 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

ஏற்கனவே இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் இன்று முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் உள்ள உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டீக்கடைகளில் நிலையான வழிகாட்டுமுறைகளை பின்பற்றி ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் டீ அருந்த அனுமதிக்கப்படுவர். கேளிக்கை விடுதிகளில் (கிளப்) உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுகள் மற்றும் உணவகங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம். தங்கும் விடுதிகள், உறைவிடங்கள் (ஓட்டல்கள் மற்றும் லாட்ஜ்கள்), விருந்தினர் இல்லங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள உணவு விடுதிகள் மற்றும் தங்குமிடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.

அருங்காட்சியகங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வழிபாட்டுத் தலங்களும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் திருவிழாக்கள்மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.

அனைத்து துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம்.

வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்பட்டுள்ளது

Also Read  திமுக எம்.எல்.ஏ.களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகம்: 18,000 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு!

Lekha Shree

சினிமா ஷூட்டிங் இப்போதைக்கு இல்லை: அமைச்சர் திட்டவட்டம்

Tamil Mint

சென்னையில் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை தந்த பயிற்சியாளர் – அதிர வைக்கும் தகவல்கள்

sathya suganthi

அதிமுக கூட்டணியிலிருந்து கழட்டி விடப்படுகிறதா தேமுதிக?

Tamil Mint

தொழிலதிபரை மணக்கிறாரா பிக் பாஸ் ஜூலி?

Tamil Mint

தளபதியின் 65 ஆவது படத்தை இயக்குகிறார் நெல்சன் திலீப்குமார்

Tamil Mint

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பொருட்கள் விற்பனைக்கு அமோக வரவேற்பு

Tamil Mint

ரூ.2 லட்சம் மதிப்பிலான 515 கிலோ குட்கா பறிமுதல்

VIGNESH PERUMAL

சென்னை: லீலா பேலஸ் ஊழியர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

Tamil Mint

அந்த கடிதம் என்னுடைய அறிக்கை அல்ல – நடிகர் ரஜினிகாந்த்

Tamil Mint

13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம் எச்சரிக்கை

sathya suganthi

எந்த தவறும் செய்யாத நான் விசாரணை ஆணையை எதிர்கொள்ள தயார்: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா

Tamil Mint