டெல்டா பிளஸ் வைரஸ் 3வது அலையின் முன்னோட்டமா? – தமிழகத்தில் 9 பேர் பாதிப்பு!


இன்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

45,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 48 பேருக்கு இதுவரை டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் 20 பேர் மற்றும் மத்திய பிரதேசத்தில் 7 பேருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது” என தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் வகை கொரோனாவால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Also Read  தமிழகம்: நியாய விலைக்கடைகள் மாலை 5 மணி வரை செயல்படும்…!

இந்தியாவில் கொரோனா வைரஸ் டெல்டா வைரஸ் மரபணுவாக மாறி பின் டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது.

இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது. எனவே எதிர்ப்பு சக்தி மிகுந்தவர்களையும் புதிய வைரஸ் எளிதில் தொற்றக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Also Read  சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர்மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Also Read  விரைவில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000? - அமைச்சர் தெரிவித்த ஹேப்பி நியூஸ்..!

தமிழகத்தில் மூன்று பேருக்கு இந்த வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முன்னதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

ஆனால், தற்போது மத்திய அரசு 9 பேருக்கு இந்த வகை கொரோனா தொற்று இருக்கிறது என தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு…!

Lekha Shree

எஸ்பிபி நலம் பெற பிரார்த்தனை செய்த ரஜினிகாந்த்: வீடியோ வெளியீடு

Tamil Mint

முதல்வர் பழனிசாமி 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை எடப்பாடியில் தொடங்கினார்

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள் | 23.5.2021

sathya suganthi

காவலர்களுக்கு உற்சாகமூட்டிய கமிஷனர்

Tamil Mint

அதிமுக வைத்தியலிங்கம் குடும்பத்துடன் பிரச்சனை; தஞ்சாவூரில் போலீஸ் மிரட்டியதால் இளைஞர் தற்கொலை!

Tamil Mint

நாளை கூடுகிறது தமிழக சட்டமன்றம் – எம்.எல்.ஏக்களுக்கு கொரோனே நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

sathya suganthi

பாலியல் புகார்: PSBB பள்ளி முதல்வர் உள்பட 5 பேருக்கு சம்மன்

sathya suganthi

சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1000? எழுத்துப்பிழை என நா.த.க. விளக்கம்

Devaraj

திமுகவின் கலப்புத் திருமணம் குறித்த வாக்குறுதியை திரித்து வீடியோ வெளியிட்ட பெண் மீது நடவடிக்கை!

Lekha Shree

தென்தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்! எங்கு தெரியுமா?

Lekha Shree