நெல்லை: ஊராட்சி மன்ற தலைவராக 90 வயது மூதாட்டி தேர்வு..!


நெல்லை மாவட்டத்தில் 90 வயது மூதாட்டி ஒருவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 74 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Also Read  திண்டுக்கல் சீனிவாசனும்.. அனிதா ராதாகிருஷ்ணனும்..! ஒத்த செருப்பு! ஒரே அணுகுமுறை! கண்டுகொள்வாரா முதலமைச்சர்?

வாக்கு எண்ணும் பணியில் 33,245 அலுவலர்களும் பாதுகாப்பு பணியில் 6,228 போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்கு எண்ணிக்கையை சிசிடிவி கேமராக்கள் மூலம் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி பல இடங்களில் ஆளுங்கட்சியான திமுகவே முன்னிலையில் உள்ளது.

Also Read  மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி: என்ன நடந்தது.?

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் 90 வயது மூதாட்டி ஒருவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவந்திபட்டியை சேர்ந்த பெருமாத்தாள் என்பவர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்.

இதில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இருவரை டெபாசிட் இழக்க செய்ததோட, இரண்டாம் இடம் பிடித்த வேட்பாளரை ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு தற்போது பலரும் பாராட்டுகளை பொழிந்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சட்டமசட்டமன்ற தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பு! ஷாக்கான திமுக!

Jaya Thilagan

கொரோனா குறித்த தமிழக தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை

Tamil Mint

தடகள பயிற்சியாளர் மீது வெளிநாட்டில் இருந்தும் குவியும் பாலியல் புகார்….!

sathya suganthi

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இனி எந்த உற்சவமும் நடைபெறாது – கோவில் நிர்வாகம்

Tamil Mint

முதல் மாத சம்பளத்தை கொரோனா நிவாரணத்திற்காக வழங்கிய எம்.எல்.ஏ!

Shanmugapriya

தேர்தலில் சீட்டு தராததால் வித்தியாசமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த மகளிர் காங்கிரஸ் தலைவி…!

Devaraj

மாவோயிஸ்டுகளை விட மோசமானவர்கள் பாஜகவினர்: மமதா பானர்ஜி

Tamil Mint

தமிழகம்: மயிலாடுதுறை தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உருவாகவுள்ளது

Tamil Mint

மேற்குவங்கத்தில் அதிசயம் நிகழ்த்துவாரா கலிதா மாஜி?

Jaya Thilagan

சொத்து வரி செலுத்தாதவர் விவரம் வெளியிட வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்.!

mani maran

துளியும் மேக்கப் இன்றி அசத்தல் அழகில் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ்…!

Tamil Mint

மின் கட்டணம் செலுத்த 3 வித சலுகைகள் – அமைச்சர் செந்தில்பாலாஜி

sathya suganthi